அமெரிக்காவில் மிகவும் மதிப்பு மிக்க வங்கி என்று போர்ப்ஸ் நிறுவனத்தால் அறிவிக்கப்பட்ட சிலிக்கான் வேலி வங்கி, திவாலானதால், அந்த வங்கியை வாங்குவதற்குத் தயாராக இருப்பதாக எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவில் ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு கடன் கொடுத்து வந்த சிலிக்கான் வேலி வங்கி, தனது சொத்துக்களைப் பாதுகாப்பாக வைக்க, அமெரிக்க அரசாங்கத்தின் கடன் பத்திரங்களில் முதலீடு செய்தது. பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கி தொடர்ந்து வட்டியை அதிகரித்ததால், கடன் பத்திரங்களின் மதிப்பு வாங்கிய விலையை விடக் குறையத் தொடங்கியது.
இதே நேரத்தில் ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள் தங்கள் தேவைகளைப் பூர்த்தி செய்ய சிலிக்கான் வேலி வங்கியில் டெபாசிட் செய்த பணத்தை வெளியே எடுக்கத் தொடங்கினர். இதனால், வங்கியின் சொத்துக்களைக் குறைந்த விலைக்கு விற்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டதால், வங்கிக்கு சுமார் 16 ஆயிரம் கோடி நஷ்டம் ஏற்பட்டது.
Also Read : பாகிஸ்தானில் உற்பத்தியை நிறுத்திய ஹோண்டா - முற்றுகிறதா நெருக்கடி?
வங்கி திவால் ஆன நிலையில், Federal Deposit Insurance Corporation கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த வங்கியில், முதலீட்டாளர்களின் பணம் மட்டும் சுமார் 14 லட்சம் கோடி ரூபாய் சிக்கி உள்ளது. இந்நிலையில், வங்கியை வாங்கத் தயாராக இருப்பதாகவும், டிஜிட்டல் வங்கியாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும் எலான் மஸ்க் தெரிவித்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.