இருசக்கர வாகனத்தில் செல்லும் போது அனைவரும் ஹெல்மெட் அணிவது அவசியம். பல விபத்துகளில் தலையில் காயம் ஏற்படுவதால்தான் உயிரிழப்புகள் அதிகம் நிகழ்வதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. ஆகவே, விபத்து ஏற்பட்டாலும் தலையில் காயம் ஏற்படாமல் காத்துக்கொள்ள தான் தலைக்கவசம் அணிய சொல்கிறார்கள். பல நாடுகளில் 18 வயதுக்குட்பட்ட குழந்தைகள் பைக் அல்லது சைக்கிள் ஓட்டும் போது கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்.
ஆனால் சீக்கியர்களுக்கு ஏற்ற தலைக்கவசம் கிடைப்பது கொஞ்சம் சிரமம். சீக்கியர்களின் கலாச்சார மரபுப்படி அவர்கள் குடுமி அணிவது வழக்கம். அப்படி அவர்கள் குடுமி போட்டு அதற்கு மேல் தலைப்பாகை அணிந்து கொள்ளும் போது தெரியாது. ஆனால் அவர்கள் தலைக்கவசம் அணியும் போது அது சரியாக பொருந்தாது.
இந்த நிலையில்தான் கனடாவில் வாழும் சீக்கியப் பெண் டினா சிங் தனது மகன்களின் தலைப் பாகைக்கு ஏற்ற ஒரு ஹெல்மெட்டை சந்தையில் தேடி கண்டுபிடிக்க முயன்றுள்ளனர். ஆனால் கிடைக்கவில்லை. அப்போதுதான் அவருக்கு ஒரு ஐடியா உதித்துள்ளது. அதன் பிறகு, குழந்தைகளின் தலைப்பாகைக்கு ஏற்ற ஹெல்மெட்டை அவரே வடிவமைக்கத் தொடங்கியுள்ளார்.
View this post on Instagram
தலையில் குடுமி வரும் இடத்தில் சற்று உயர்த்தப்பட்டு, குடுமி அதில் தகவமைத்துக் கொண்டு முழு தலைக்கும் பாதுகாப்பு தரும்படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இதை தனது மகன்களுக்கு மட்டும் செய்யாமல், இதுபோன்ற மற்ற சீக்கிய குழந்தைகளுக்கு பயன்படும் விதமாக "சீக்கிய ஹெல்மெட்ஸ்" என்ற இணையதளத்தை உருவாக்கி அதன் மூலம் விற்பனை செய்து வருகிறார்.
சீக்கிய ஹெல்மெட்ஸ் எனும் எங்கள் மல்டி ஸ்போர்ட்ஸ் ஹெல்மெட் சைக்கிள், கிக் ஸ்கூட்டர், இன்லைன் ஸ்கேட் விளையாட்டு மற்றும் ஸ்கேட்போர்டிங் ஆகியவற்றிற்கு பயன்படுத்த சான்றளிக்கப்பட்டுள்ளது என்று தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். தெரபிஸ்டாக பணிபுரியும் டினா, தற்போது ஒரு தொழில்முனைவோராகவும் மாறியுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.