கொரோனா 2.0: இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உணவளிக்கும் சீக்கியர்கள்

கொரோனா 2.0: இங்கிலாந்தில் சிக்கித் தவிக்கும் ஓட்டுநர்களுக்கு உணவளிக்கும் சீக்கியர்கள்

புகைப்படங்களை டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள்ங்களில் பகிர்ந்துள்ள அவர்கள், உணவு, பிஸ்கட்ஸ், கிறிஸ்துமஸ் கிப்ட் உள்ளிட்ட தங்களால் இயன்ற பொருட்களை கொடுத்து ஓட்டுநர்களுக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

புகைப்படங்களை டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள்ங்களில் பகிர்ந்துள்ள அவர்கள், உணவு, பிஸ்கட்ஸ், கிறிஸ்துமஸ் கிப்ட் உள்ளிட்ட தங்களால் இயன்ற பொருட்களை கொடுத்து ஓட்டுநர்களுக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
கொரோனாவின் இரண்டாம் அலை பரவுவதால் இங்கிலாந்தில் இருந்து செல்வோருக்கு பிரான்ஸ் அரசு தடை விதித்திருப்பதால், இரு நாட்டு எல்லையில் சிக்கித் தவிக்கும் லாரி ஓட்டுநர்களுக்கு அங்குள்ள சீக்கியர்கள் உணவளித்து உதவி வருகின்றனர்.

கடந்த ஆண்டு சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸின் தாக்கம் உலகம் முழுவதும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. கடுமையான கட்டுபாடுகள், ஊரடங்கு, முடக்கம் என பல்வேறு படிநிலைகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கையின் காரணமாக கொரோனா வைரஸின் தாக்கம் மெதுவாக குறையத் தொடங்கியது. மேலும், பல்வேறு நிறுவனங்கள் தடுப்பூசிகளை கண்டுபிடித்துள்ளதால், கொரோனா அச்சத்தில் இருந்து மக்கள் சற்று விடுபட்டு வந்தனர். இந்நிலையில், இங்கிலாந்தில் புதிய வகை கொரானா வைரஸ் கண்டுபிடிக்கபட்டுள்ளது உலக நாடுகளிடையே புதிய பீதியை ஏற்படுத்தியுள்ளது. 

இங்கிலாந்து விஞ்ஞானிகள் மேற்கொண்ட ஆய்வில், கொரோனா வைரஸ் வளர்சிதை மாற்றமடைந்து புதிய பரிமாணத்தில் மக்களிடையே பரவி வருவதாக தெரிவித்துள்ளது. இங்கிலாந்தில் கண்டுபிடிக்கப்பட்டிருந்தாலும், இந்தவகை வைரஸ் ஆப்பிரிக்கா உள்ளிட்ட நாடுகளில் ஏற்கனவே பரவத் தொடங்கிவிட்டதாகவும் அவர்கள் கூறியுள்ளனர். புதிய வகை கொரோனா முன்பைக்காட்டிலும் 70 விழுக்காடு வேகமாக பரவும் தன்மை கொண்டது என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இதனையடுத்து, இங்கிலாந்துடனான விமானப் போக்குவரத்தை பிரான்ஸ், ஜெர்மனி உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளும், இந்தியாவும் துண்டித்துள்ளன. பல்வேறு நாடுகளும் புதிய கொரோனா முடக்கங்களை அறிவித்து வரும் நிலையில், இங்கிலாந்துடனான சாலைப்போக்குவரத்தையும் பிரான்ஸ் முடக்கியுள்ளது. இதனால், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சரக்கு லாரிகள் இரு நாட்டு எல்லையிலும் அணி வகுத்து நிற்கின்றன. கென்ட் எல்லைப் பகுதியில் மட்டும் 2,850 லாரிகள் அணிவகுத்து நிற்கின்றன. 

ஓட்டுநர்களுக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு, அதன் முடிவுகளில் நெகடிவ் வந்தால் மட்டுமே அவர்கள் பிரான்ஸ் நாட்டுக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். கொரோனா பரிசோதனை முடிவுகள் வருவதற்கு நீண்ட நேரமாவதால், லாரிகளின் எண்ணிக்கை எல்லைப் பகுதியில் கூடிக்கொண்டே செல்கிறது. இதனால் அங்கு இருக்கும் ஓட்டுநர்கள் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்துகொள்ள முடியாமல் கடும் அவதியடைந்து வருகின்றனர்.   
View this post on Instagram

 

A post shared by Langar Aid (@langaraid)


இதனையறிந்த இங்கிலாந்தில் இருக்கும் சீக்கிய குழுவினர், தங்களின் தொண்டு நிறுவனங்கள் மூலம் இங்கிலாந்து - பிரான்ஸ் எல்லையில் சிக்கித் தவிக்கும் ஓட்டுநர்களுக்கு தேவையான உணவுகளை முறையான பாதுகாப்பு வசதிகளுடன் வழங்கி வருகின்றன. குறிப்பாக, கல்சா ஏய்ட் (Khalsa Aid), லாங்கர் எய்ட் (Langer Aid) சீக்கிய குழுவினர் தோவர் பகுதியில் உணவு தயாரித்து ஓட்டுநர்களுக்கு கொடுக்கின்றனர். 

Also read... வழக்கறிஞர் கொலை வழக்கின் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய காவல்துறைக்கு உத்தரவு

இதுதொடர்பான புகைப்படங்களை டிவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதள்ங்களில் பகிர்ந்துள்ள அவர்கள், உணவு, பிஸ்கட்ஸ், கிறிஸ்துமஸ் கிப்ட் உள்ளிட்ட தங்களால் இயன்ற பொருட்களை கொடுத்து ஓட்டுநர்களுக்கு உதவுமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவலால் இங்கிலாந்தில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: