ஹோம் /நியூஸ் /உலகம் /

கொரோனா தடுப்பூசி காப்புரிமைக்கு விலக்கு - உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

கொரோனா தடுப்பூசி காப்புரிமைக்கு விலக்கு - உலக வர்த்தக அமைப்பின் மாநாட்டில் முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்து

உலக வர்த்தக அமைப்பின் மாநாடு

உலக வர்த்தக அமைப்பின் மாநாடு

9 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாட்டில் 9 ஆண்டுகளுக்குப் பிறகு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தாகி உள்ளன.

உலக வர்த்தக அமைப்பின் 12வது அமைச்சர்கள் மாநாடு ஜெனிவாவில் கடந்த 12 ஆம் தேதி தொடங்கியது.  இந்த ஆண்டு கூட்டத்தின் முக்கிய விவாதப் பொருளாக உணவு மற்றும் வேளாண் பாதுகாப்பு, மீன்வளத்துறை மானியம் மற்றும் கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமை விலக்கு ஆகியவை இருந்தன.

ஜூன் 16 ஆம் தேதி வரை நடைபெற்ற இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகளை எட்டுவதில் இழுபறி நீடித்தது. கூட்டத்தின் கடைசி இரண்டு நாட்கள் தீவிர விவாதங்களை சந்தித்தன. கூட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள ஒப்பந்தங்கள் முன்னேறிய நாடுகளுக்கு சாதகமாக இருப்பதாக இந்தியா உட்பட பல வளரும் நாடுகள் குற்றம் சாட்டின.  இறுதியில் இந்திய நேரப்படி இன்று அதிகாலை 5 மணியளவில் பெரும்பான்மையான உறுப்பு நாடுகள் ஒப்பந்தத்தில் ஏகமனதாக கையெழுத்திட்டன.

மீன்பிடித் தொழிலுக்கான மானியம் நிறுத்தப்பட வேண்டும் என்று முன்னேறிய நாடுகளின் சார்பில் வாதிடப்பட்ட போது, இந்தியாவின் முயற்சியால் மீனவர்களுக்கு மானியங்களை நீட்டிப்பது குறித்த ஒப்பந்தத்தில் இருந்த சர்ச்சைக்குரிய ஷரத்துகள் கடைசி நிமிடத்தில் நீக்கப்பட்டன.

Also Read: இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க சக்தி உருவாக்கத்தில் உதவவரும் அமெரிக்கா

இதேபோல கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என்று இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள் கோரின.  இதற்கு இங்கிலாந்து, ஸ்விட்சர்லாந்து உள்ளிட்ட நாடுகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் கடைசி நாளில் உறுப்பு நாடுகள் இதனை ஏற்றுக் கொண்டன.  இதனால் கொரோனா தடுப்பூசிகளுக்கான காப்புரிமை விலக்கு ஒப்பந்தம் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்தியா உள்ளிட்ட வளரும் நாடுகள், மருந்து உரிமையாளரிடம் அனுமதி பெறாமல் தடுப்பூசிகளைத் தயாரித்து ஏற்றுமதி செய்ய முடியும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, உலக உணவுத் திட்டத்திற்கான ஏற்றுமதிக் கட்டுப்பாடுகளைத் தடை செய்ய உறுப்பு நாடுகள் ஒப்புக்கொண்ட நிலையில், உள்நாட்டு தேவை பாதிக்கப்பட்டால் ஏற்றுமதியைக் கட்டுப்படுத்தலாம் என்ற நிபந்தனையை இந்தியா முன்வைத்தது. புதன்கிழமையன்று பேச்சுவார்த்தை இழுபறியான நிலையில் பல்வேறு நாடுகளுடன் பேசி ஒருமித்த கருத்தை கொண்டு வரும் முயற்சியை இந்தியா மேற்கொண்டது.  இதையடுத்து 9 ஆண்டுகளுக்குப் பின் வரலாற்று சிறப்பு மிக்க ஒப்பந்தங்கள் உறுதி செய்யப்பட்டுள்ளதாக உலக வர்த்தக அமைப்பு தெரிவித்துள்ளது.

First published:

Tags: Corona Vaccine, World trade organisation