Home /News /international /

கடைசி நேரத்தில் ஆர்டர் செய்த நபருக்கு, இலவச உணவு வழங்கிய ஹோட்டல் - சுவாரஸ்ய நிகழ்வு!

கடைசி நேரத்தில் ஆர்டர் செய்த நபருக்கு, இலவச உணவு வழங்கிய ஹோட்டல் - சுவாரஸ்ய நிகழ்வு!

இலவச உணவு வழங்கிய ஹோட்டல்

இலவச உணவு வழங்கிய ஹோட்டல்

ஆஸ்திரேலியாவில் உடல் நலம் சரியில்லாத நபருக்கு உணவு வழங்கிய உணவகத்தின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அன்பின் காரணத்தால் உடனே அந்த உணவகத்திற்கு கூகுளில் சென்று 5 ஸ்டார் ரேட்டிங் தந்துள்ளார்.

உலகில் அன்பு, கருணை, மனிதநேயம் போன்ற முக்கிய பண்புகள் இல்லையென்றால் என்றோ இந்த உலகம் அழிந்திருக்கும். இங்குள்ள சில நல்ல மனிதர்களால் தான் பெரும்பாலானோர் நிம்மதியாக வாழ முடிகிறது. அதுவும் முகம் தெரியாத மனிதர்களுக்கு எந்தவித எதிர்பார்ப்பும் இன்றி உதவுபவர்கள் அற்புதமான மனிதர்கள் என்றே சொல்லலாம். இது போன்ற ஒரு நெகிழ்ச்சியான சம்பவம் ஆஸ்திரேலியாவில் உள்ள ஒருவருக்கு நடந்துள்ளது.

உடல்நிலை சரியில்லாத ஒரு நபர் சாப்பிடுவதற்காக ஃபெட்டூசின் கார்பனாரா பாஸ்தா என்கிற உணவை அங்குள்ள உணவகம் ஒன்றில் ஆர்டர் செய்துள்ளார். அந்த நபருக்கு காய்ச்சல் இருந்ததால் ஓய்வெடுத்த பிறகு அவர் தாமதாக எழுந்துள்ளார். எனவே அந்த உணவகம் மூடுவதற்கு சில நிமிடங்கள் முன்பு தான் அவர் ஆர்டர் செய்துள்ளார். மேலும் அவர் ஆர்டர் செய்தத்துடன், ஒரு சிறிய மெசேஜை அந்த உணவகத்திற்கு அனுப்பியுள்ளார்.

அதில், "என்னை மன்னிக்கவும்; எனக்கு உடல்நிலை சரியில்லை, அதனால் இப்போது தான் எழுந்தேன். எனவே உங்களிடம் தாமதமாக ஆர்டர் செய்துள்ளேன். ஒருவேளை நீங்கள் உணவகத்தை மூட போகும் நேரம் வந்துவிட்டால் எனது ஆர்டரை கேன்சல் செய்து விடுங்கள்" என்று அந்த நபர் உணவகத்திற்கு மெசேஜ் அனுப்பி உள்ளார். அந்த உணவகத்தில் பணிபுரிபவர்கள் இதை படித்துவிட்டு அவர் ஆர்டர் செய்த பாஸ்தாவுடன், இலவசமாக கார்லிக் பிரட்டை அனுப்பி வைத்துள்ளனர்.

ALSO READ |  உறவுகளின் உன்னதம் உணர்த்தும் தவளை - வைரலாகும் வீடியோ

மேலும் அவருக்கு ஒரு சிறிய குறிப்பு ஒன்றை பேப்பரில் எழுதி அந்த ஆர்டருடன் அனுப்பியுள்ளனர். அதில் "உங்களின் அன்பான குறிப்புக்கு நன்றி, தாமதமாக ஆர்டர் செய்ததை நினைத்து வருந்த வேண்டாம், நாங்கள் கவலைப்படவில்லை. நீங்கள் கொஞ்சம் நன்றாக உணர உங்களுக்காக கார்லிக் பிரட்டை இதில் இலவசமாக வைத்துள்ளோம். உங்களைப் போன்றோரின் அன்பான மெசேஜ்கள் எங்களின் நாளை சிறப்பாக்குகின்றன. நன்றி." என்று அந்த சிறிய குறிப்பில் உணவகத்தில் பணிபுரிபவர் எழுதி அனுப்பி உள்ளார்.

இந்த குறிப்பை அந்த உடல்நிலை சரியில்லாத நபர் படித்துவிட்டு நெகிழ்ந்து போனார். அவருக்கு ஏற்பட்ட அன்பின் காரணத்தால் உடனே அந்த உணவகத்திற்கு கூகுளில் சென்று 5 ஸ்டார் ரேட்டிங் தந்துள்ளார். மேலும் அதில், "இவர்கள் எனக்காக நான் உடல்நிலை சரியில்லாத போது என் வீட்டிற்கு கார்லிக் பிரட்டை இலவசமாக அனுப்பி வைத்துள்ளனர். இவர்களின் அன்பான சிறிய குறிப்பையும் டெலிவரி பாக்சில் அனுப்பி உள்ளனர்.

ALSO READ |  சோறு தான் முக்கியம்.. கல்யாண மண்டபம் எரிந்துக் கொண்டிருக்க, பந்தியில் ஒரு கட்டு கட்டும் நபர்... வைரல் வீடியோ

இதை படித்துவிட்டு அங்கு பணிபுரியும் ஒவ்வொருவரின் நெத்தியிலும் எனக்கு முத்தம் கொடுத்தாக வேண்டும் போன்று இருந்தது. மேலும் எனக்காக இவர்கள் கார்பனாரா பாஸ்தாவின் மீது சீஸை வேகவைத்து சேர்த்துள்ளனர். இது மிகவும் மொறுவலாகவும் சுவையாகவும் இருந்தது. எனக்கு ஆனந்தத்தில் கண்கள் கலங்கிவிட்டன. இந்த ராஜாக்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்" என்று ரீவியூவ் செய்துள்ளார்.

இதை பார்த்த அந்த உணவகத்தினர் ரெட்டிட் சமூக ஊடகத்தில் அவரின் அந்த ரிவியூவை குறிப்பிட்டு பதிவு ஒன்றை எழுதியுள்ளனர். "இரண்டு நாட்களுக்கு முன்பு எங்களின் கடையை மூடுவதற்கு 14 நிமிடங்கள் இருக்கும் முன்பு ஒருவர் உணவை ஆர்டர் செய்தார். அத்துடன் அவர் கனிவான ஒரு மெசேஜை குறிப்பிட்டிருந்தார். நாங்கள் அதை படித்திவிட்டு அவருக்கு ஒரு சிறிய குறிப்பு எழுதினோம் மற்றும் கார்லிக் பிரட்டை இலவசமாக அனுப்பினோம். 2 மணி நேரத்திற்கு முன்பு தான் அவர் எங்களை பற்றி குறிப்பிட்ட இந்த அன்பான ரிவியூவை பார்த்தேன். எங்களை இது மிகவும் மகிழ்ச்சியாக்கி விட்டது" என்று அந்த உணவகத்தில் பணிபுரிபவர் ரெட்டிட்டில் பதிவிட்டுள்ளார்.

ALSO READ |  கால்பந்து விளையாட்டில் அசத்தும் நாய் - வைரலாகும் வீடியோ

இந்த பதிவை நெட்டிசன்கள் வைரலாக்கி வருகின்றனர். பலர் இந்த நெகிழ்ச்சி சம்பவத்தை பற்றிய தங்களது கருத்துக்களை சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Sankaravadivoo G
First published:

Tags: Australia

அடுத்த செய்தி