'பறிக்கப்பட்டது எனது கண்கள் அல்ல கனவுகள்..' - போலீஸ் வேலைக்குச்செல்ல ஆசைப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..

போலீஸ் வேலைக்குச் செல்ல ஆசைப்பட்ட பெண்ணின் கண்கள் பறிக்கப்பட்ட சம்பவம் ஆப்கானிஸ்தான் நாட்டில் நடந்துள்ளது.

'பறிக்கப்பட்டது எனது கண்கள் அல்ல கனவுகள்..' - போலீஸ் வேலைக்குச்செல்ல ஆசைப்பட்ட பெண்ணிற்கு நேர்ந்த கொடூரம்..
கதேரா
  • Share this:
ஆப்கானிஸ்தான் நாட்டை சேர்ந்த இஸ்லாமிய பெண் கதேரா. வயது 33. இவர் போலீஸ் வேலை செய்து வந்துள்ளார். இந்த வேலை இவரது நீண்ட நாள் கனவு. எனினும் இவரது கனவிற்கு தந்தை முட்டுக்கட்டை போட்டுள்ளார். கதேராவின் தந்தைக்கு அவர் சுயமாக வேலைக்கு செல்வது பிடிக்கவில்லை. எனினும் எதையும் பொருட்படுத்தாது தனது கனவை நோக்கி அடி எடுத்து வைத்துள்ளார் கதேரா.

இந்நிலையில் இரு சக்கர வாகனத்தில் வழக்கம் போல வேலையை முடித்துக் கொண்டு வீடு திரும்பிய கதேரா வீட்டிற்கு வந்து சேரவில்லை. வரும் வழியிலேயே அவரை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் கதேராவின் கண்களை தாக்கி விட்டு ஓடிவிட்டனர்.

காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்ட கதேரா கண்விழித்து பார்த்தபொழுது தனக்கு ஒன்றும் தெரியவில்லை. இருட்டாக இருக்கின்றது என கதறி அழுதுள்ளார். தனது நிலைக்கு காரணம் தாலிபன் ஆட்கள்தான் என காவல் துறையினரும், கதேராவும் கூறி வருகின்றனர். மேலும் தனது தந்தைக்கு பணிக்கு சென்று வருவது பிடிக்காத காரணத்தால் அவரே ஆட்களை வைத்து இவ்விதம் செய்திருக்கலாம் எனவும் சந்தேகிக்கின்றனர்.


இது குறித்து கதேரா தெரிவிக்கையில் , நான் தற்போது தான் வேலைக்குச் சென்றுள்ளேன். 1 ஆண்டாவது முடித்திருக்கலாம். பறிக்கப்பட்டது எனது கண்கள் அல்ல கனவுகள் என வருத்தமுடன் கூறியுள்ளார்.
First published: November 13, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading