வடகொரியாவில் திடீர் உணவு பஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் 2025-ம் ஆண்டு வரை மக்கள் கொஞ்சமாக உணவு சாப்பிட வேண்டும் என அந்நாட்டு அரசு அதிர்ச்சி உத்தரவு பிறப்பித்துள்ளது.
வடகொரியாவில் உணவுப்பொருட்கள் விலை வானாளவ உயர்ந்துள்ளது. அதனால் 2025 வரை மக்கள் எல்லாம் அளவாச் சாப்பிட வேண்டும் என்று வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன் கேட்டுக்கொண்டுள்ளார் என்பதை விட கட்டளையிட்டுள்ளார் என்று கூறுவதே பொருந்தும்.
கடந்த ஆண்டு ஏற்பட்ட வெள்ளம் காரணமாகவும் மற்ற இயற்கைப் பேரழிவுகள், விவசாயத்துக்கான் பொருட்களின் போதாமை, வறட்சி, மிக மிகக் குறைட்ந்த இயந்திரமயமாக்கம், பயிர்கள் சேதம் ஆகியவற்றால் வடகொரியாவில் உணவுப்பொருள்கள் விலை கடுமையாக அதிகரித்துள்ளன. . இதனால் நாட்டில் உணவுப் பஞ்சம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இதனிடையே, கொரோனா அச்சுறுத்தலால் வட கொரியா தனது நாட்டுடனான வெளிநாட்டு எல்லைகளுக்கு 'சீல்' வைத்துள்ளது. குறிப்பாக, உணவுப் பொருட்கள், எரிபொருள் என மிகவும் அத்தியாவசியத் தேவைகளுக்காக சார்ந்திருந்த சீன எல்லையையும் மூடியுள்ளது. இதனால் அங்கு ஒரு கிலோ வாழைப்பழத்தின் விலை 45 டாலர், 32 யூரோவாக இருக்கிறது. அதாவது இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.3,300 ஆகும். வட கொரிய மக்கள் மிகக் கடுமையான உணவுப் பஞ்சத்தில் தவித்து வருகின்றனர்.
இந்நிலையில் 2025ம் ஆண்டு வரை நாட்டு மக்கள் குறைவாக உண்ணும் பழக்கத்தைக் கடைபிடிக்க வேண்டும் என்ற அதிபரின் உத்தரவுக்கு உலக நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன. வட கொரியாவின் சினுயிஜு நகரத்தில் வசிப்பவர்கள் கூறியதாவது: 2025 வரை அரசு மக்களை குறைவாக உணவு உண்ணச் சொல்கிறது. இது எப்படி சாத்தியம் ஆகும்.
இப்போதே உணவுக் கையிருப்பு நிலை மிகவும் மோசமாக நிலையிலேயே உள்ளது. தினமும் உணவு பற்றாக்குறையால் கடுமையாகத் தவித்து வருகிறோம். எங்களுக்கு உணவு பிரச்சினையை எப்படி எதிர்கொள்வது என்றே தெரியவில்லை?. இவ்வாறு அவர்கள் கூறினர்.
அதிபர் கிம் ஜோங் உன், மக்களுக்கான உணவு தற்போது பதற்ற நிலைக்குச் சென்றுள்ளது. சூழ்நிலை டென்ஷனை அதிகரித்துள்ளது. வேளாண் துறை பயிர் உற்பத்தியை திட்டமிட்டபடி செய்யவில்லை என்று கூறுகிறார் வடகொரிய அதிபர்.
சமீபத்தில் இலங்கையில் கூட இயற்கை விவசாய முறைக்கு மாறியதால் உணவு உற்பத்தி குறைந்து அங்கு உணவுப்பஞ்சம் ஏற்பட்டது. அதிபர் ராஜபக்சே திடீரென உரங்கள் இறக்குமதிக்குத் தடை விதித்தார், இதனால் விவசாயிகள் திடீரென இயற்கை விவசாயத்திற்கு மாறியதால் உணவுப்பஞ்சம் ஏற்பட்டது.
Published by:Muthukumar
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.