ஹோம் /நியூஸ் /உலகம் /

கொரோனவை விட கொடூர வைரஸ்…பீதியைக் கிளப்பும் சீனா

கொரோனவை விட கொடூர வைரஸ்…பீதியைக் கிளப்பும் சீனா

மாதிரி படம்

மாதிரி படம்

ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவம் DSTO என்ற பெயரில் மிகப்பெரிய மற்றும் மிக நவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. அந்த ஆராய்ச்சி மையத்தில் சீனா தற்போது புதிய நோய்க் கிருமியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • intern, Indiachinachina

  கொரோனாவை விட கொடிய நோய் பரப்பும் வைரஸ் கிருமியை பாகிஸ்தான் துணையோடு சீனா உருவாக்கி வருவதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளது.

  கோவிட் தொற்று பரவல் ஏற்படுத்திய அச்சம் இன்னும் பலருக்கு நினைவில் இருந்து மறைந்திருக்காது. அதன் தாக்கத்தில் இருந்து உலகம் இன்னும் முழுமையாக மீளவில்லை. பொருளாதார ரீதியாகவும், மன ரீதியாகவும் மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது கொரோனா தொற்று. இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய நோய்த் தொற்று பரவல் இது என பதிவு செய்யப்பட்டுள்ளது.

  இந்நிலையில் கொரோனா வைரஸை விட அதிக ஆபத்தை ஏற்படுத்தும் பேரழிவு நோய்க் கிருமியை சீனா உருவாக்கி வருவதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் பீதியை கிளப்பி வருகிறது. ஊகான் தொற்றுநோயியல் நிறுவனம் பாகிஸ்தானின் ரவல்பிண்டியில் உள்ள ஆய்வகத்தில் அந்த புதிய நோய்க் கிருமியை உருவாக்கி வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  ராவல்பிண்டியில் பாகிஸ்தான் ராணுவம் DSTO என்ற பெயரில் மிகப்பெரிய மற்றும் மிக நவீன அறிவியல் ஆராய்ச்சி மையத்தை நிறுவியுள்ளது. அந்த ஆராய்ச்சி மையத்தில் சீனா தற்போது புதிய நோய்க் கிருமியை உருவாக்கி வருவதாக கூறப்படுகிறது. கொரோனா கிருமியைப் போலவே பரவும் தன்மை கொண்ட இந்த புதிய வகை வைரஸ் கொரோனாவை விட போராபத்தை விளைவிக்கும் என கூறப்படுகிறது.

  உலகம் முழுவதும் 62 கோடி பேருக்கு மேல் கொரோனா தொற்று பாதித்து, சுமார் 60 லட்சத்திற்கும் அதிகமானோர் உயிரை இழந்துள்ளதாக உலக சுகாதார அமைப்பு புள்ளி விபரங்கள் தருகிறது. ஆனால் தற்போது சீனா உருவாக்கி வரும் வைரஸ் கொரோனாவை விட மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்கிற செய்தி தான் நம் முதுகு தண்டுவடத்தை சில்லிட வைக்கிறது.

  'எனது காலில் இருந்து 3 குண்டுகளை எடுத்தனர்’- பாகிஸ்தான் முன்னாள் அதிபர் இம்ரான் கான்

  இது போன்ற பேராபத்தை விளைவிக்கும் நோய்க் கிருமிகள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்காகவும், அத்தகைய நோய்க் கிருமிகளை உருவாக்குவதற்காக மட்டுமே ராவல்பிண்டி ஆராய்ச்சி மையம் உருவாக்கப்பட்டிருக்கிறது. அந்த மையத்தில் தான் இந்த புதிய வகை ஆட்கொல்லி வைரஸை உருவாக்கும் பணி நடைபெற்று வருகிறது.

  வுஹான் இன்ஸ்டிடியூட் ஆப் வைராலஜி

  இத்தகைய நோய்க்கிருமியை உயிரி ஆயுதமாக பயன்படுத்தும் திட்டமும் இரு நாடுகளிடையே இருப்பதாகவும் செய்திகள் வெளியாகி சர்வதேச நாடுகளை நடுநடுங்க வைத்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் அரசு இது போன்ற செய்திகள் உண்மையில்லை என மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும், ராவல்பிண்டியில் இது போன்ற ஆராய்ச்சி மையம் ஏதும் இல்லை எனவும் பாகிஸ்தான் அரசு திட்டவட்டமாக மறுப்பு தெரிவித்துள்ளது.

  இங்கிலாந்து மக்கள் தொகையில் ஆதிக்கம் செலுத்தும் இந்தியர்கள்... கணக்கெடுப்பில் தகவல்

   ஏற்கனவே ஊகான் நகரில் உயிரி ஆயுதமாக பயன்படுத்தும் நோக்கில் சீன அரசு தயாரித்த கோவிட் வைரஸ் எதேச்சையாக கசிந்து தான் உலகளாவிய பேரழிவு ஏற்பட்டது என பலரும் குற்றம் சாட்டி வரும் நிலையில் தற்போது மற்றொரு கொடிய வைரஸ் உருவாக்கப்படுவதாக வரும் செய்திகள் மக்களை மேலும் பீதியில் ஆழ்த்தியுள்ளது என்பது தான் உண்மை.

  Published by:Srilekha A
  First published:

  Tags: China, Corona