Home /News /international /

ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி - அதிர்ச்சியூட்டும் தகவல்

ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி - அதிர்ச்சியூட்டும் தகவல்

ரஷ்ய அதிபர் புடின்

ரஷ்ய அதிபர் புடின்

2017 முதல் இன்று வரை புடின் 5 முறை கொலை முயற்சியால் இருந்து தப்பித்து உள்ளார்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • inter, Indiarussiarussia
    ரஷ்ய அதிபர் புடின் தனது அதிகாரபூர்வ இல்லத்துக்கு காரில் சென்ற போது, முன்னால் சென்ற பாதுகாப்பு வாகனத்துக்கு குறுக்கே ஆம்புலன்ஸ் வந்து நின்றதாகவும், அப்போது புடின் காரின் முன்பக்க சக்கரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

    ரஷ்ய அதிபர் புடினை கொல்ல முயற்சி நடந்ததாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. 'ஈரோ வீக்லி நியூஸ்' என்ற ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. உடனடியாக பாதுகாவலர்கள் அதிபர் புடினின் காரை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்ற நிலையில், இந்தத் தாக்குதல் முயற்சியில் புடின் எந்த விதமான ஆபத்தின்றி தப்பினார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    "புடினின் குடியிருப்புக்குச் செல்லும் வழியில், சில கிலோமீட்டர் தொலைவில், முதல் எஸ்கார்ட் கார் ஆம்புலன்ஸ் மூலம் தடுக்கப்பட்டது, இரண்டாவது எஸ்கார்ட் கார் திடீரென தடையின்றி  நிற்காமல் சுற்றிச் சென்றது. இந்த சம்பவம் தொடர்பாக சிலர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.

    உக்ரேனில் ரஷ்யாவின் இராணுவ இழப்புகளை மேற்கோள் காட்டி விளாடிமிர் புட்டினின் ராஜினாமாவை ரஷ்யாவில் உள்ள அரசியல்வாதிகள் குழு கோரிய ஒரு வாரத்திற்குப் பிறகு இது நடந்துள்ளது. பலர் புடின் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.

    கடந்த பிப்ரவரி ரஷ்யா ஐரோப்பிய உள்ள உக்ரைன் மீது போர் தொடுத்தது. புடினின் கார் சக்கரத்தில் தாக்குதல் நடத்தப்பட்டது. 2017 முதல் இன்று வரை புடின் 5 முறை கொலை முயற்சியால் இருந்து தப்பித்து உள்ளார்.

     
    Published by:Srilekha A
    First published:

    Tags: Russia, Russia - Ukraine, Vladimir Putin

    அடுத்த செய்தி