ஹோம் /நியூஸ் /உலகம் /

காது வலிக்காக மருத்துவரை சந்தித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

காது வலிக்காக மருத்துவரை சந்தித்த பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி!

பெண்ணின் காதுக்குள் உயிருடன் சிலந்தி பூச்சி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் காதுக்குள் உயிருடன் சிலந்தி பூச்சி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பெண்ணின் காதுக்குள் உயிருடன் சிலந்தி பூச்சி வாழ்ந்து வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

சீனாவை சேர்ந்த இளம்பெண் ஒருவர் திடீரென அவரின் காதில் ஏதோ அசெளகரியம் ஏற்பட்டுள்ளதை உணர்ந்துள்ளார். அதோடு, அவர் காதுக்குள் ஒரு விசித்திரமான சத்தமும் கேட்டுள்ளது. முதன்முதலாக இதுபோன்ற அனுபவத்தை உணரும்போது, அந்த பெண் வெளியில் இருந்துள்ளார்.

தொடர்ந்து, அவரின் காதில் கடுமையான வலி ஏற்பட ஆரம்பித்ததும், அதனை தாங்கிக்கொள்ள முடியாமல், ஏதேனும் நோய்தொற்று ஏற்பட்டிருக்கும் என்று எண்ணி, உடனடியாக மருத்துவ பரிசோதனைக்கு செல்ல முடிவு செய்து மருத்துவமனை சென்றுள்ளார்.

அங்கு, அந்த பெண்ணின் காதினை பரிசோதித்த மருத்துவர் காதுக்குள் அடைப்பு இருப்பதை கண்டறிந்தார். உடனே அவரின் காதில் காமிராவை பொருத்தி பரிசோதித்த போது காதின் உட்புற சவ்வில் சிலந்தி பூச்சி ஒன்று இருப்பதை கண்டறிந்துள்ளார். இதனைக் கேட்டதும் அப்பெண் அதிர்ச்சி அடைந்தார்.

ஒருநாள் இரவு முழுவதும் அவரின் காதில் உயிருடன் சிலந்தி இருந்து அவருக்கு வலியை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, காதுக்குள் இருந்த சிலந்தியை எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப் கருவி மூலம் மருத்துவர் வெளியேற்றி உள்ளார். இந்த எலக்ட்ரிக் ஓட்டோஸ்கோப் காதுக்குள் பரிசோதனை செய்ய பயன்படுத்தும் உபகரணமாகும்.

சிலந்தி பூச்சியை காதுக்குள் இருந்து வெளியே எடுத்த பின்னர் தான், அந்த பெண்ணுக்கு வலி குறைந்து நிம்மதி அடைந்துள்ளார்.

சீனாவில், இதே போல் கடந்த 2019ம் ஆண்டு இளைஞர் ஒருவரின் காதில் ஏதோ உறுவது போல இருப்பதை நீண்ட நாட்களாக உணர்ந்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து, தனது பிரச்சினைக்கு மருத்துவரை அணுகியுள்ளார். அப்போது, மைக்ரோஸ்கோபி மூலம் அவரை பரிசோதனை செய்த மருத்துவர் காதின் உள்ளே சாம்பல் நிற சிலந்தி இருப்பதை கண்டறிந்தார்.

இதைத்தொடர்ந்து, நீண்ட காலமாக அவரின் காதில் வசித்து வந்த சிலந்தியை டாக்டர் வெளியேற்றினார். இதில், அந்த இளைஞருக்கு எவ்வித காயமும் ஏற்படவில்லை.

First published:

Tags: News On Instagram