ஈராக்கில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் தேர்தல் நடைபெற்றது. இதில் ஷியா பிரிவு மதகுருவான முக்தாதா அல்-சதர் தலைமையிலான கட்சி அதிக இடங்களை கைப்பற்றியது. . எனினும், பெரும்பான்மை இல்லாததால் இதுவரை ஈராக்கில் புதிய அரசு அமையவில்லை.புதிய பிரதமராக வேறு ஓருவர் தேர்வு செய்யப்படுவதை எதிர்த்த அல்சதர் ஆதரவாளர்கள் கடந்த ஜூலை மாதம் நாடாளுமன்றத்துக்குள் குடியேறி போராட்டம் நடத்தினர்.
இந்நிலையில் திடீர் திருப்பமாக அரசியலில் இருந்து விலகுவதாக அல்சதர் அறிவித்தார். இதனால் கோபமடைந்த அவரது ஆதரவாளர்கள் Green Zone எனப்படும் அரசு அலுவலக கட்டடங்கள் இருக்கும் பகுதிக்குள் நுழைந்து போராட்டம் நடத்தினர். இதையடுத்து போராட்டகாரர்கள் மீது பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 30க்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் தொலைக்காட்சியில் தோன்றிய அல்சதர், அரசு அலுவலக கட்டடங்களிலிருந்து தனது ஆதரவாளர்கள் வெளியேற வேண்டும் என்றார். அதை ஏற்று சிலர் தங்களது போரட்டத்தை கைவிட்டனர். எனினும் முழுமையாக போராட்டம் முடிவுக்கு வரவில்லை என கூறப்படுகிறது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.