இலங்கை குண்டுவெடிப்பில் வங்கப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் உயிரிழப்பு!

ஷேக் ஹசீனாவின் உறவினரான ஷேக் சலீமின் மகள், மருமகன் மற்றும் இரு பேரன்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர்.

Web Desk | news18
Updated: April 22, 2019, 6:26 PM IST
இலங்கை குண்டுவெடிப்பில் வங்கப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் பேரன் உயிரிழப்பு!
உயிரிழந்த சிறுவன்
Web Desk | news18
Updated: April 22, 2019, 6:26 PM IST
வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினரும் வங்கதேசத்தின் அவாமி லீக் கட்சியின் தலைவருமான ஷேக் சலீமின் பேரன் ஜயான் சவுத்ரி நேற்று நடந்த இலங்கை குண்டுவெடிப்பில் பலியாகி உள்ளார்.

வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவின் உறவினரான (அத்தை மகன்) ஷேக் சலீமின் மகள், மருமகன் மற்றும் இரு பேரன்கள் இலங்கைக்கு சுற்றுலா சென்றுள்ளனர். நேற்று இலங்கையில் தேவாலயங்கள், நட்சத்திர ஹோட்டல்கள் என 8 இடங்களில் தொடர் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது.

இதில், ஷேக் சலீமின் மருமகன் மொஷியுல் ஹக் சவுத்ரி படுகாயமடைந்து சிகிச்சை பெற்றுள்ளார். 8 வயதுப் பேரன் ஜயான் நேற்றிலிருந்து கானவில்லை என்ற செய்தி கூறப்பட்டு வந்த நிலையில், அச்சிறுவன் தாக்குதலில் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.


இந்தக் குடும்பத்தார் தங்கியிருந்த ஹோட்டலில் நடத்தப்பட்ட தாக்குதலில்தான் இத்துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது. காயமடைந்து சிகிச்சை பெற்று வருவதால் மொஷியுல் நாடு திரும்ப முடியாது எனக் கூறப்படுகிறது. பலியான சிறுவன் ஜயானின் உடல் நாளை கொழும்பூவிலிருந்து வங்கதேசம் கொண்டு செல்லப்படுகிறது.

Photos: இலங்கை குண்டு வெடிப்பின் சிதிலங்கள்..Loading...

மேலும் பார்க்க: தொடர் குண்டு வெடிப்பின் எதிரொலியாக இலங்கையில் அவரச நிலை பிரகடனம்!
First published: April 22, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...