வங்கதேசத் தேர்தல் - தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா

வங்காளதேசத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை இடங்களை பெற 151 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும். அவாமி லீக் கட்சித் தலைமையிலான கூட்டணி 281 இடங்களைக் கைப்பற்றியுள்ளது.

Web Desk | news18
Updated: December 31, 2018, 2:05 PM IST
வங்கதேசத் தேர்தல் - தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் ஷேக் ஹசீனா
ஷேக் ஹசீனா(image courtesy:AP)
Web Desk | news18
Updated: December 31, 2018, 2:05 PM IST
வங்காள தேசத்தில் நடைபெற்றப் பாராளுமன்றத் தேர்தலில் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான கட்சி மிகப் பெரும் வெற்றியைப் பெற்று மீண்டும் ஆட்சியமைக்கவுள்ளது.

வங்காளதேசத்தில் பாராளுமன்றத் தேர்தல் நேற்று நடந்து முடிந்தது. இந்தத் தேர்தலில், பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் கட்சி மற்றும் முன்னாள் பிரதமர் கலிதா ஜியா தலைமையிலான வங்காளதேச தேசியவாதக் கட்சி இடையே கடும் போட்டி நிலவியது.

மொத்தமுள்ள 300 தொகுதிகளில் 299 தொகுதிகளுக்கு நேற்று தேர்தல் நடைபெற்றது. இதில் ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சி பெரும்பான்மை இடங்களைக் கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து மூன்றாவது முறையாக மீண்டும் ஆட்சி அமைக்கவிருக்கிறது.

வங்காளதேசத்தைப் பொறுத்தவரை பெரும்பான்மை இடங்களை பெற 151 தொகுதிகளை கைப்பற்ற வேண்டும்.

அவாமி லீக் கட்சித் தலைமையிலான கூட்டணி 288 இடங்களைக் கைப்பற்றியுள்ளது. இதன்மூலம் நான்காவது முறையாக வங்காளதேச பிரதமராக ஷேக் ஹசீனா ஆட்சி அமைக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

பிரதான எதிர்கட்சியான வங்களாதேச தேசியக் கட்சி 6 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதற்கிடையே இந்தத் தேர்தலில் முறைகேடு நடந்ததுள்ளதாகவும், இது கேலிக்கூத்தானது. மீண்டும் தேர்தல் நடத்தப்படவேண்டும் என்றும் எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

முன்னதாக தேர்தல் சம்பந்தப்பட்ட வன்முறை மற்றும் மோதலில் 17 பேர் பலியாகியுள்ளனர். வன்முறைகள் பரவுவதை தடுக்க நாடு முழுவதும் இணைய சேவையும் முடக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Loading...
இதுகுறித்து வங்காளதேச தேர்தல் ஆணையம், ‘தேர்தல் நடைபெற்றதில் மோசடி நடைபெற்றுள்ளது என்று நாடு முழுவதும் புகார் எழுந்துள்ளது. அதுகுறித்து விசாரணை நடத்தப்படும்’ என்று தெரிவித்துள்ளது.

தேர்தலுக்கு முன்னரே, வாக்குப் பதிவு மோசடி குறித்து புகார் எழுந்தது. பிரதான எதிர்கட்சியைச் சேர்ந்த 47 உறுப்பினர்கள் கடைசி நேரத்தில் தேர்தலில் போட்டியிடுவதிலிருந்து பின்வாங்கினர்.

Also see:

First published: December 31, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...