பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமாரக பாகிஸ்தான் முஸ்லீம் லீக் கட்சியின் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்(70) தேர்வாகியுள்ளார். அந்நாட்டின் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் ஒன்றிணைந்து ஷெபாஸ் ஷெரீப்பை பிரதமராக தேர்வு செய்துள்ளனர்.
கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு இம்ரான் கானின் தெஹ்ரீக் இ இன்சாப் கட்சி பாகிஸ்தானில் ஆட்சியமைத்து வந்தது. அதன் கூட்டணி கட்சி எம்பிக்கள் சிலர் ஆதரவை திரும்ப பெற்றனர். இதையடுத்து இம்ரான் கான் அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை எதிர்க்கட்சிகள் கொண்டு வந்தன. இதன் மீதான வாக்கெடுப்பு நடைபெறவிருந்த நிலையில், சில நாட்களுக்கு முன்பாக இம்ரான் கானின் பரிந்துரையின்பேரில் நாடாளுமன்றத்தை சபாநாயகர் கலைத்தார்.
எது தொடர்பான வழக்கில், நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தது. இதை தொடர்ந்து நடத்தப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தில் இம்ரான் கான் தோல்வியடைந்ததை அடுத்து தனது பதவியை அவர் ராஜினாமா செய்தார். இதையடுத்து புதிய பிரதமராக எதிர்க்கட்சித் தலைவர் ஷெபாஸ் ஷெரீப்பு தேர்ந்தெடுக்கப்படலாம் என்று கூறப்பட்டது.
மேலும் படிக்க: அம்மா சொர்க்கத்தில் சந்திக்கிறேன்.. போரில் உயிரிழந்த தாய்க்கு உக்ரைன் சிறுமி உருக்கமான கடிதம்
அதன்படியே, புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பு ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இவர் பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார். ஷெபாஸுக்கு ஆதரவாக 174 உறுப்பினர்கள் வாக்களித்தனர். புதிதாக தேர்வு செய்யப்பட்ட பிரதமர்ஷெபாஸ் ஷெரீப்புக்கு அந்நாட்டு எதிர்க்கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். பாகிஸ்தானுக்கு புதிய விடியல் பிறந்துள்ளதாகவும், எதிர்க்கட்சிகளின் கூட்டணி பாகிஸ்தானை சீரமைக்கும் என ஷெபாஸ் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானில் ராணுவச் சட்டத்தை அமல்படுத்துவதாக மிரட்டிய இம்ரான் கான் - பகீர் தகவல்
அதேவேளை, புதிய பிரதமர் தேர்வுக்கு முன்னதாக தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இம்ரான் கான் ராஜினாமா செய்தார். திருடர்களுடன் அமர்ந்து அவையில் பணியாற்ற விரும்பவில்லை என அவர் கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.