Home /News /international /

Excel சொல்லிக் கொடுத்தே மாதம் ₹1 கோடி சம்பாதிக்கும் பெண் - எப்படி தெரியுமா?

Excel சொல்லிக் கொடுத்தே மாதம் ₹1 கோடி சம்பாதிக்கும் பெண் - எப்படி தெரியுமா?

மாதிரி படம்

மாதிரி படம்

மைக்ரோசாஃப்ட் எக்செல்லில் தனக்கு தெரிந்த எளிய வழிமுறைகளை வீடியோ மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக்கில் பகிர்ந்து மாதம் 1 கோடி சம்பாதித்து வருகிறார்.

  இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியில் எதை வேண்டுமானாலும் நம்மால் சாதிக்க முடியும் என்கிற நிலை உருவாகி உள்ளது. குறிப்பாக ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி பல்வேறு விஷயங்களை நம்மால் செய்ய முடியும். மேலும் இவற்றின் மூலம் லட்சம் முதல் கோடி வரை நம்மால் சம்பாதிக்கவும் முடியும். வெறும் பொழுதுபோக்கிற்காக மட்டுமே சமூக ஊடகங்களை பயன்படுத்துவோர் மத்தியில், இப்படி பலர் தன்னிடம் உள்ள திறமைகளை வெளிக்காட்டும் விதமாக இவற்றை பயன்படுத்தி வருகின்றனர்.

  அந்த வகையில் கேட் நார்டான் என்கின்ற 27 வயது பெண்மணி, மைக்ரோசாஃப்ட் எக்செல்லில் தனக்கு தெரிந்த எளிய வழிமுறைகளை வீடியோ மூலம் இன்ஸ்டாகிராம் மற்றும் டிக்-டாக்கில் பகிர்ந்து மாதம் 1 கோடி சம்பாதித்து வருகிறார். இதை படிக்கும் எல்லோருக்கும் நிச்சயம் அதிர்ச்சி கலந்த ஆச்சரியம் இருக்க கூடும். ஆம், நீங்கள் படிப்பது முற்றிலும் உண்மை தான்.

  பலருக்கு எக்செல் பயன்படுத்துவது மிக சிரமமானதாக தோன்றும். அதில் உள்ள பல நுணுக்கங்களை அறிந்திருக்காததால் இப்படியொரு எண்ணம் ஏற்படுகிறது. ஆனால் கேட் சொல்லி தரும் எளிய வழிகளை கற்று கொண்டால் நீங்களும் எக்செல்லில் ஜாம்பவான் ஆகிவிடுவீர்கள். இவர் மற்றவர்களை போன்று இல்லாமல் மிகவும் விளையாட்டுத்தனமான முறையில் சொல்லி தருகிறார். இதனால் தான் இவருக்கு விரைவிலேயே அதிக ஃபாலோவர்ஸ் வந்துவிட்டனர்.

  Also Read : உலகின் முதல் 3D பிரிண்ட் செய்யப்பட்ட செயற்கைக் கண் பெற்ற நபர்!

  இவர் தனது கார்ப்பரேட் வேலையை விட்டுவிட்டு ஆன்லைனில் மைக்ரோசாஃப்ட் எக்செல் சொல்லி தரலாம் என்று முடிவெடுத்துள்ளார். அதன்படி தனது வேலையில் இருந்து வெளியேறியும் உள்ளார். பின்னர் நவம்பர் 2020-இல் தனக்கென ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை தொடங்கியுள்ளார். அதற்கு @miss.excel என்று பெயர் வைத்துள்ளார். இதை தொடங்கிய ஒரு வருடத்திற்குள்ளே இவரின் கனவு நினைவாகியது. ஆம், இவர் தற்போது லட்சத்தில் இருந்து கோடி வரை, ஒவ்வொரு மாதமும் ஆன்லைனில் சொல்லி தருவதன் மூலம் சம்பாதிக்கிறார்.

  இவருக்கு ஒரே வருடத்தில் லட்சக் கணக்கான ஃபாலோவர்ஸ் வர தொடங்கினர். இதற்கான முக்கிய காரணம் என்னவென்றால், கேட் மற்றவர்களை போன்று இல்லாமல் சொல்லி தருவதை வேடிக்கையான முறையில் கொண்டு சென்றார். இவரின் எல்லா வீடியோக்களும் ஆடலும் பாடலுமாக இருக்கும். அத்துடன் நீங்கள் கற்க வேண்டியவற்றையும் கற்று முடித்து விடலாம். பலரின் வரவேற்பை பெற்ற கேட், ஆன்லைனில் சொல்லி தரும் வேலையை முழு நேரமாக செய்ய தொடங்கி விட்டார்.

  Also read : திருமண சடங்கின் போது நைட்சூட் அணிய விருப்பம் - ஷாக் கொடுத்த மணப்பெண்

  இவர் மைக்ரோசாஃப்ட் எக்செல் மற்றும் கூகுள் ஷீட் பற்றிய வகுப்புகளை எடுப்பதுடன் இதர மைக்ரோசாஃப்ட் மற்றும் ஆன்லைன் புராடக்ட்களையும் வகுப்புகளாக எடுத்து சம்பாதித்து வருகிறார். ஏப்ரல் 2021 வரை 6 டிஜிட் எண்களில் இவர் பணம் சம்பாதித்து வந்தார். தற்போது இவரின் தீவிர முயற்சியின் மூலம் கோடியை தொட்டுள்ளார். இவரின் ஆண் நண்பரும் தனது வேலையில் இருந்து விலகி, கேட் நார்டானுடன் சேர்ந்து உதவி வருகிறார்.

  இவரின் சாதனையை பற்றி படிப்பத்றகு அதிசயமாக உள்ளது அல்லவா?! எண்ணிய செயலை விடா முயற்சியுடனும், தினந்தோறும் செய்து வந்தால் 'வெற்றிக்கனி' நம்மை நிச்சயம் தேடி வரும் என்பதை கேட் நார்டானின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்று கொள்ள வேண்டும்.
  Published by:Vijay R
  First published:

  அடுத்த செய்தி