தாய்லாந்து - லாவோஸ் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவு!

தாய்லாந்து - லாவோஸ் எல்லைப் பகுதியில் நிலநடுக்கம்... ரிக்டர் அளவுகோலில் 6.1-ஆக பதிவு!
கோப்புப் படம்
  • News18
  • Last Updated: November 21, 2019, 4:56 PM IST
  • Share this:
தாய்லாந்து மற்றும் லாவோஸ் நாடுகளின் எல்லைப்பகுதியில் இன்று காலை சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.

ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவான இந்த நிலநடுக்கத்தால் மிக உயரமான கட்டடங்களில் வசித்தவர்கள் அரை நிமிடம் வரை நில அதிர்வை உணர்ந்தனர்.

தெற்கு தாய்லாந்தின் பெரிய நகரமான சியாங் மய் நகரவாசிகள் நீண்ட நேரம் நில அதிர்வை உணர்ந்தனர். வியட்நாம் தலைநகரான ஹனோயிலும் நில அதிர்வு உணரப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்து இதுவரை தகவல் வெளியாகவில்லை.


Also see...
First published: November 21, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்