இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைகளுக்கு மூன்றாவது நபரே தீர்வு காண முடியும் - பாக். வெளியுறவு அமைச்சர்

காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பல முறை முயற்சி மேற்கொண்டபோதிலும், இந்தியா முன்வரவில்லை என்று ஷா மெகமூத் குரேஷி குற்றம்சாட்டினார்.

news18
Updated: September 12, 2019, 12:21 PM IST
இந்தியா- பாகிஸ்தான் பிரச்சினைகளுக்கு மூன்றாவது நபரே தீர்வு காண முடியும் - பாக். வெளியுறவு அமைச்சர்
பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி
news18
Updated: September 12, 2019, 12:21 PM IST
இந்தியா- பாகிஸ்தான் இடையே நிலவும் பிரச்சினைகளுக்கு மூன்றாவது நபர் தலையீட்டின் மூலமே தீர்வுகாண முடியும் என்று பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் ஷா மெகமூத் குரேஷி தெரிவித்துள்ளார்.

ஐநா மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஸ்விட்சர்லாந்து சென்றிருந்த ஷா மெகமூத் குரேஷி, ஸ்விஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.

அதில், காஷ்மீரில் நிலவும் சூழலை ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் புரிந்துகொண்டுள்ளதாகவும், அரசியல் காரணங்களுக்காக தங்களது குரலை ஒலிக்கவில்லை என்றும் அவர் கூறினார்.


காஷ்மீர் பிரச்சினை குறித்து பேச்சுவார்த்தை நடத்த பல முறை முயற்சி மேற்கொண்டபோதிலும், இந்தியா முன்வரவில்லை என்று அவர் குற்றம்சாட்டினார்.

இந்தியா- பாகிஸ்தான் இடையே இருதரப்பு பேச்சுவார்த்தைக்கு வாய்ப்பு இல்லை என்று கூறிய குரேஷி, மூன்றாவது நாட்டின் தலையீட்டின் மூலமே பிரச்சினைக்கு தீர்வுகாண முடியும் என்று கூறினார்.

இதற்கிடையே, ஜம்மு - காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவும், பாகிஸ்தானும் பேசி தீர்வு காண வேண்டும் என்று ஐ.நா.பொதுச்செயலாளர் அன்டோனியா குட்ரெஸ் தெரிவித்துள்ளார். இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது என்றும் இந்த விவகாரத்தில் ஐ.நா.,வின் நிலையில் எப்போதும் மாற்றமில்லை என்றும் அன்டோனியா குட்ரெஸ் குறிப்பிட்டுள்ளார்.

Loading...

Also see...

First published: September 12, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...