துருவ ஆய்வாளர் எர்னஸ்ட் ஷேக்கிள்டனின் கப்பலான “எண்ட்யூரன்ஸ்”, அண்டார்டிக் கடல் பனிப்பாறைகளுக்கு இடையில் சிக்கி மூழ்கியது. ஒரு நூற்றாண்டுக்கு முன்னர் கடல் அடிவாரத்தில் சுமார் 10,000 அடிக்குக் கீழே (3,000 மீ) மூழ்கியது, அந்த கப்பல் கண்டுபிடிக்கப்பட்டதாக அதைத் தேடும் குழு மார்ச் 9 அன்று தெரிவித்தது.
அதாவது கடலடித்தரையில்தான் இந்த எண்ட்யூரன்ஸ் கப்பல் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
1915 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அண்டார்டிகாவை முதன்முதலில் கடக்க ஷேக்கிள்டனின் முயற்சி தோல்வியுற்றபோது, மூன்று மாஸ்டட் பாய்மரக் கப்பல் அப்போது காணாமல் போனது.
144 அடி நீளமுள்ள மரக்கப்பலின் சிதைவுகளைக் கண்டறிவதற்கான முந்தைய முயற்சிகள், பனிப்பாறைகள் மூடிய வெட்டெல் கடலின் மோசமான சூழ்நிலைகளினால் தோல்வியில் முடிந்தது. இருப்பினும், ‘எண்ட்யூரன்ஸ்22’ பணிதிட்டம், ஃபாக்லாண்ட்ஸ் மரிடைம் ஹெரிடேஜ் அறக்கட்டளையால் ஏற்பாடு செய்யப்பட்டு, உயர்-வரையறை கேமராக்கள் மற்றும் ஸ்கேனர்கள் பொருத்தப்பட்ட சாபர்டூத்ஸ் எனப்படும் மேம்பட்ட கடலடி வாகனங்களைப் பயன்படுத்தி, கப்பலின் எச்சசொச்சங்களைக் கண்டுப்பிடித்தது.
படக்காட்சிகள் குறிப்பிடத்தக்க வகையில் கப்பலைக நல்ல நிலையில் காட்டியது, அதன் பெயர் இத்தனையாண்டுகள் ஆகியும் பின்புறத்தில் தெளிவாகத் தெரிந்தது. பிரிட்டிஷ் துருவ ஆய்வாளர் ஜான் ஷியர்ஸ் தலைமையிலான இந்த பயணம் - தென்னாப்பிரிக்காவின் பனி உடைக்கும் கப்பலான அகுல்ஹாஸ் II இலிருந்து இயக்கப்பட்டது மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கத்தையும் ஆய்வு செய்தது - வோர்ஸ்லி பதிவு செய்த இடத்தில் இருந்து நான்கு மைல் (ஆறு கிமீ) தொலைவில் "எண்ட்யூரன்ஸ்" கண்டுபிடிக்கப்பட்டது.

100 ஆண்டுகள் ஆனாலும் எண்ட்யூரன்ஸ் என்ற பெயருக்கேற்ப பெயர் கூட அழியாமல் இருந்த கப்பல்.
பனிப்பாறைகளில்ல் சிக்கித் தவித்த போதிலும், "எண்ட்யூரன்ஸ்" இன் 28 பேர் கொண்ட குழுவினர் உயிருடன் வீட்டிற்குத் திரும்பிய அதிசயம் நிகழ்ந்தது. மனித வரலாற்றில் இதைப்போன்ற மனித உயிர்பிழைத்தல் அதிசயம் வேறு எதுவும் இருக்க முடியாது என்கின்றனர் வரலாற்றறிஞர்கள்.
அவர்கள் உயிர்பிழைத்த கதை சுவாரஸ்யமானது. அவர்கள் மூன்று லைஃப் படகுகளில் பயணம் செய்து, மக்கள் வசிக்காத யானைத் தீவை அடைவதற்கு முன்பு, கடல் பனிப்பாறைகளில் நடைபயணம் மேற்கொண்டனர்.
அங்கிருந்து, ஷேக்கில்டன் மற்றும் சில குழுவினர் ஜேம்ஸ் கேர்ட் என்ற லைஃப் படகில் சுமார் 800 மைல்கள் (1,300 கிமீ) தெற்கு ஜார்ஜியாவுக்குச் சென்றனர், அங்கு அவர்கள் ஒரு திமிங்கல நிலையத்தின் உதவியை நாடினர்.
அவரது நான்காவது மீட்பு முயற்சியில், ஷேக்கில்டன் 1916-ல் சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு தனது இம்பீரியல் டிரான்ஸ்-அண்டார்டிக் பயணம் லண்டனை விட்டு கிளம்பி 2 ஆண்டுகளுக்குப் பிறகு எலிஃபண்ட் தீவில் இருந்து மீதமுள்ள குழுவினரை அழைத்து வர முடிந்தது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.