முகப்பு /செய்தி /உலகம் / மைனஸ் 45 டிகிரி... எலும்பை உருக்கும் குளிர்.. பனிப்புயலில் தவிக்கும் அமெரிக்கா..!

மைனஸ் 45 டிகிரி... எலும்பை உருக்கும் குளிர்.. பனிப்புயலில் தவிக்கும் அமெரிக்கா..!

அமெரிக்காவில் பனிப்புயல்

அமெரிக்காவில் பனிப்புயல்

பனிப்பொழிவு காரணமாக நகரங்கள் முழுவதும் சுமார் 3 அடி உயரத்துக்கு பனி மூடி காணப்படுவதால் போக்குவரத்து முடங்கியுள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • inter, IndiaTexasTexas

அமெரிக்காவின் தெற்கு மற்றும் தென்மேற்கு மாகாணங்களில் பனிப்புயல் காரணமாக பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. டெக்சாஸ் மாகாணத்தின் தலைநகர் ஆஸ்டினில் கடும் பனிப்பொழி காரணமாக ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட வீடுகள் மற்றும் வணிக வளாகங்களில் மின்சார சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்பொழிவு காரணமாக டெக்சாஸில் 7 பேர் உள்பட தென் மாகாணங்களில் இதுவரை 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

நியூ இங்கிலாந்து பகுதியில் பல ஆண்டுகளுக்கு பிறகு மைனஸ் 45 டிகிரி செல்சியசிற்கு கீழ் வெப்பநிலை பதிவாகி உள்ளது. இதனால், மைனே, வெர்மான்ட், நியூ ஹாம்ப்ஷயர், மாசசூசெட்ஸ், கனெக்டிகட், ரோட் தீவு ஆகிய இடங்கள் பனிப்பொழிவால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. டென்னசி, மிசிசிப்பி உள்ளிட்ட மாகாணங்களிலும் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.

வடக்கு நியூயார்க் பகுதியிலும் வெப்பநிலை ஜீரோ டிகிரி செல்சியஸிற்கு கீழ் சென்றது. பனிப்பொழிவு காரணமாக நகரங்கள் முழுவதும் சுமார் 3 அடி உயரத்துக்கு பனி மூடி காணப்படுகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக முக்கிய நெடுஞ்சாலைகள் மூடப்பட்டுள்ளன.

மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரமுடியாத சூழல் நிலவுகிறது. மேலும், பனிப்புயல் காரணமாக அமெரிக்காவில் ஆயிரத்து 500 விமானங்கள் ஒரே நாளில் ரத்து செய்யப்பட்டுள்ளன. அதிகபட்சமாக 700 சர்வதேச விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும் பல விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன.

First published:

Tags: Snowfall, USA, Winter