உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 7 சிறப்பு விமானங்கள் இந்தியா வந்தடைந்தன
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க 7 சிறப்பு விமானங்கள் இந்தியா வந்தடைந்தன
கோப்புப் படம்
கடந்த 26ம் தேதி தொடங்கி, இதுவரை 7 விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 7வது விமானம் இன்று காலை 8 மணியளவில் மும்பைக்கு வந்தடைந்தது. 182 இந்தியர்கள் அதில் பயணித்தனர்.
உக்ரைனில் சிக்கியிருக்கும் இந்தியர்களை மீட்க, இயக்கப்பட்டு வரும் சிறப்பு விமானங்களில், 7 விமானங்கள் இதுவரை இந்தியா வந்தடைந்துள்ளன.
ரஷ்யா - உக்ரைன் இடையே நடந்து வரும் போர் காரணமாக, இந்தியர்கள் 20 ஆயிரம் பேர், உக்ரைனில் இருந்து வெளியேற முடியாமல் தவித்து வந்தனர். அவர்களை மீட்க ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் உக்ரைனின் அண்டை நாடுகளுக்கு இந்திய அரசு சிறப்பு விமானங்களை இயக்கி, அங்கிருந்து இந்தியர்களை மீட்டு வருகிறது.
கடந்த 26ம் தேதி தொடங்கி, இதுவரை 7 விமானங்கள் மூலம் இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். 7வது விமானம் இன்று காலை 8 மணியளவில் மும்பைக்கு வந்தடைந்தது. 182 இந்தியர்கள் அதில் பயணித்தனர்.
மும்பை வந்த இந்தியர்களை, விமான நிலையத்தில், மத்திய அமைச்சர் நாராயண் ரானே வரவேற்றார். எட்டாவது விமானம் புகரெஸ்டில் இருந்து டெல்லிக்கும். இதேபோல் 9வது விமானம் புடாபெஸ்டில் இருந்து டெல்லிக்கும் வந்து கொண்டிருக்கின்றன.
Published by:Vinothini Aandisamy
First published:
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.