சீனாவில் அடுத்தடுத்து நிலநடுக்கம்: 12 நாடுகளில் உணரப்பட்டது!

சீனா நிலநடுக்கம்

சீனாவின் ஒரே இரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன

 • Share this:
  சீனாவின் ஒரே இரவில் அடுத்தடுத்து ஏற்பட்ட நிலநடுக்கங்கள் காரணமாக இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளனர். மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து  நடைபெற்று வருகின்றன.

  சீனாவின் யுனான் மாகாணத்தில் உள்ள டாலியில் நேற்று  இரவு 9.48 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர்  அளவில் 6.1 ஆகப் பதிவானது . இதில் 3 பேர் பலியானதாகவும்  27 பேர் வரை காயமடைந்துள்ளதாகவும் முதற்கட்ட தகவல் வெளியானது.

  நிலநடுக்கம் காரணமாக சில கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக உள்ளூர்  நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதேபோல், 20 ஆயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் என்றும் கூறப்பட்டுள்ளது.

  யுனான் மாகாணத்தில் சில நடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரம் கழித்து அங்கிருந்து 1200 கிலோ மீட்டர் தொலைவில் திபெத்திய பள்ளத்தாக்கிற்கு வடமேற்கில் உள்ள குயிங்காய் மாகாணத்தில்   சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோளில் 7.3ஆக பதிவானது. இந்த நிலநடுக்கம் 12 நாடுகளில் உணரப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மேலும் படிக்க.. ஜூன்3ம் தேதிக்குள்  அடுத்த தவணை கொரோனா நிதி வழங்கப்படும்!

  இந்த  இரு சக்தி வாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்படுவதற்கு முன்பாக நேற்றைய தினம் சிறுசிறு நிலநடுக்கங்கள்  ஏற்பட்டுள்ளதாகவும் சீன தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  மீட்பு நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. சீனா அவ்வப்போது நிலநலடுக்கங்களால் பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த 2008ம் ஆண்டு  சீனாவில் ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டரில் 7.9 அளவாக பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் 87 ஆயிரம் பேர் பலியானோர் மற்றும் காணாமல் போயினர்.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள் பணையம்
  Published by:Murugesh M
  First published: