ஆன்லைன் வகுப்புகள் - வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்தாகும் என அமெரிக்கா எச்சரிக்கை

ஆன்லைன் வகுப்புகள் - வெளிநாட்டு மாணவர்களின் விசா ரத்தாகும் என அமெரிக்கா எச்சரிக்கை
(AP Photo/Charles Krupa, File)
  • Share this:
அமெரிக்க பல்கலைக்கழகங்கள் ஆன்லைன் வகுப்புகளைத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களின் விசாக்கள் ரத்து செய்யப்படும் என குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக, பல்வேறு கல்வி நிறுவனங்கள் ஆன்லைன் வகுப்புகளை தொடங்கியுள்ள நிலையில், அமெரிக்காவில் ஒரு சில பல்கலைக்கழகங்கள் மட்டுமே ஆன்லைன் வகுப்புகளை நடத்தி வருகின்றன.

அனைத்து பல்கலைக்கழகங்களும் ஆன்லைன் மூலம் வகுப்புகளை நடத்தத் தொடங்கினால், வெளிநாட்டு மாணவர்களுக்கு விசா வழங்குவது முற்றிலும் நிறுத்தப்படும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது.



Also read... விஜயகாந்திற்கு பழையபடி கம்பீரமான குரல் வந்துவிட்டது - மருத்துவர் மகிழ்ச்சி

அத்துடன் தற்போது அமெரிக்காவில் தங்கியுள்ள மாணவர்களும் வெளியேற்றப்படுவார்கள் என குடியுரிமைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதனால், ஏராளமான இந்திய மாணவர்கள் வெளியேற்றப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
First published: July 7, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading