உலகையோ உலுக்கிய படுகொலைகளை செய்த சர்வதேச கிரிமினல் சார்லஸ் சோப்ராஜ் தனது சொந்த நாடான பிரான்சுக்கு திரும்பியுள்ளார். இரு நாள்களுக்கு முன்னர் நேபாள சிறையில் இருந்து விடுதலையான இவர் காத்மாண்டுவில் இருந்து பிரான்ஸ் நாட்டிற்கு விமானம் மூலம் புறப்பட்டு சென்றார். 1970இல் இருந்து 1980 காலகட்டத்தில் 20க்கும் மேற்பட்ட கொடூர கொலைகளை சார்லஸ் செய்துள்ளார்.
1970 காலத்தில் தாய்லாந்து நாட்டில் உள்ள பட்டாயா பீச்சில் 6 பெண் சுற்றுலா பயணிகளுக்கு சார்லஸ் போதைப் பொருள் கொடுத்து கொலை செய்துள்ளார். அப்போது தான் தாய்லாந்து அரசு சார்லஸ்சுக்கு கைது வாரண்ட் பிறப்பித்தது. இதை தொடர்ந்து தெற்காசிய நாடுகளான இந்தியா, நேபாளம் போன்ற நாடுகளில் தொடர்ச்சியாக கொலை குற்றங்களை செய்து தப்பியோடியுள்ளார் சார்லஸ்.
நேபாளத்தில் அமெரிக்கா மற்றும் கனடா நாட்டை சேர்ந்த பெண்களை கொலை செய்து தப்பியோடியுள்ளார். இந்தியாவிலும் பிரான்ஸ் நாட்டு சுற்றுலா பயணிகளுக்கு விஷம் வைத்து சதித்திட்டம் தீட்டிய குற்றத்திற்காக சார்லஸ் கைது செய்யப்பட்டார். இவ்வாறு பல நாடுகளில் கிரிமினல் குற்றங்களை செய்து சர்வதேச கிரிமினலாக திரிந்த சார்லஸை இந்திய காவல்துறையால் 1980களில் இறுதியில் கைது செய்யப்பட்டார்.
இந்தியாவில் 10 ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை அனுபவித்த சார்லஸை நேபாள காவல்துறை 2003ஆம் ஆண்டில் கைது செய்தது. நேபாள நீதிமன்றம் சார்லஸ்சுக்கு இரட்டை ஆயுள் தண்டனை வழங்கியது. சுமார் 20 ஆண்டுகள் சிறைவாசம் செய்த சார்லஸ், தனது உடல்நலனை காரணம் காட்டி முன்கூட்டியே தன்னை விடுதலை செய்ய வேண்டும் என தொடர் கருணை மனுக்களை அளித்து வந்தார் சார்லஸ். இந்நிலையில் 78 வயதான சார்லஸ்சின் கோரிக்கையை ஏற்றும் நேபாள அரசு விடுதலை செய்கிறது.
பிகினி உடை அணிந்த பெண்களை குறிவைத்து கொலை செய்ததால் The Bikini killer என்றும் சாமார்த்தியமாக பலே திட்டங்களை தீட்டி காவல்துறை பிடியில் இருந்து பாம்பு போல தப்பி செல்லும் திறன் கொண்டதால் The serpent என்ற பட்டப்பெயர்கள் இவருக்கு உள்ளது.
இதையும் படிங்க: 20 நாளில் 25 கோடி பேர்... உச்சம் தொட்ட கொரோனா பரவல் : சீனா எடுத்த புதிய முடிவு
இவர் குறித்து பிபிசி, நெட்பிளிக்ஸ் ஆகியவை டாக்குமென்டரி தொடர்களை வெளியிட்டுள்ளன. நாடு திரும்பிய சோப்ராஜ் தனது விடுதலை குறித்து கூறுகையில், "நான் சிறப்பாக உணர்கிறேன். நிறைய வேலைகள் செய்ய வேண்டியுள்ளது. பலர் மீது வழக்கு தொடரவுள்ளேன். குறிப்பாக என் மீது பொய் வழக்குகளை புனைந்து சிறையில் அடைத்த நேபாள அரசு மீது வழக்கு தொடரவுள்ளேன்" என்றுள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Crime News, France, Nepal, Psycho killer