ஹோம் /நியூஸ் /உலகம் /

பஸ் குறுக்கே வந்த கழுதை மீது மோதாமல் தவிர்க்க முயன்ற டிரைவர்.. விபத்தில் சிக்கி 20 பேர் பலி!

பஸ் குறுக்கே வந்த கழுதை மீது மோதாமல் தவிர்க்க முயன்ற டிரைவர்.. விபத்தில் சிக்கி 20 பேர் பலி!

செனகல் பஸ் விபத்து

செனகல் பஸ் விபத்து

செனகல் நாட்டில் கழுதை மீது மோதுவதை தவிர்க்க முயன்ற பேருந்து, கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 20 பேர் உயிரிழந்தனர்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • interna, IndiaSenegalSenegal

கிழக்கு ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான செனகலில் லோகா என்ற இடத்தில் 40-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேருந்து சென்றது. அப்போது எதிர்பாராத விதமாக சாலையில் கழுதை ஒன்று குறுக்கிட்டது. அதன் மீது மோதுவதை தவிர்க்க ஓட்டுநர் பேருந்தை திருப்பிய போது, கட்டுப்பாட்டை இழந்த வாகனம் கவிழ்ந்தது.

இதில், பேருந்தில் இருந்த 20 பயணிகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனர். 20-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கடந்த வாரம் காப்ரீன் என்ற இடத்தில் 2 பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 40 பேர் உயிரிழந்தனர். தரமற்ற சாலையால் விபத்துகள் தொடர்ந்து நடைபெறுவதாக அந்நாட்டு மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட அந்நாட்டு அதிபர் மேக்கி சல், மீண்டும் ஒரு கோர விபத்து ஏற்பட்டுள்ளது. நம் நாட்டின் சாலை போக்குவரத்தை மேம்படுத்த வேண்டும். உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் என தெரிவித்தார்.

First published:

Tags: Accident, Bus accident