சவுதியில் வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய குறியீடை குறிக்கும் எமோஜீயை அனுப்பியதாக புகார் எழுந்தால் சிறை தண்டனை விதிக்கப்படும் என சைபர் கிரைம் பொதுமக்களை எச்சரித்துள்ளது. சவுதி சட்டத்தின்படி, குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவின் மோசடி புகார்களுக்கு எதிரான அமைப்பின் உறுப்பினர் அல் மோடாஸ் குட்பி, சவுதி நாளிதழுக்கு விடுத்துள்ள அறிக்கையில், வாட்ஸ் அப்பில் சிவப்பு நிற இதய எமோஜீயை ஒருவரது விருப்பம் இல்லாமல் அனுப்புவது துன்புறுத்தல் குற்றத்திற்கு சமம் ஆகும் என்றும், ஆன்லைனில் சேட்டிங் செய்யும் போது சில படங்கள் மற்றும் எமோஜீக்களை பயன்படுத்துவதால், எதிர்தரப்பினர் காயமடைந்ததாக புகார் தொடர்ந்தால், அது துன்புறத்தல் குற்றமாக கருதப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த ஒரு நபருடனும் அவர்களின் அனுமதியின்றி உரையாடலில் ஈடுபடுவதையோ அல்லது சங்கடமாக உணர வைக்கும் வகையில் உரையாடல்களில் ஈடுபடுவதையோ, சிவப்பு நிற இதய எமோஜீக்களை பயன்படுத்துவதையோ தவிர்க்கும் படிஅவர் எச்சரித்துள்ளார்.
Also read: "இது காதலிக்கும் வயசல்ல" - பள்ளி மாணவிகளுக்கு போலீசார் அறிவுரை
ஒரு நபரின் தன்மானத்தை தொடும் அல்லது பாலியல் அர்த்தத்துடன் வெளிப்படுத்தும் ஒவ்வொரு செயலும், சைகையும் துன்புறுத்தல் என்றே வரையறுக்கப்படுகிறது. நீவின தொழில்நுட்பம் மூலம் சிவப்பு நிற எமோஜீக்கள் மற்றும் சிவப்பு ரோஜாக்கள் போன்ற சமூகத்தின் வழக்கப்படி பாலியல் அர்த்தங்களுடன் தொடர்புடைய எமோஜீக்களும் இதில் அடங்கும் என்று அவர் கூறியுள்ளார்.
இதுபோன்ற எமோஜீக்களை பயன்படுத்தும்போது கவனமாக இருக்க வேண்டும் என்றும், எதிர் தரப்பில் உள்ளவர் இதன் மூலம் பாதிக்கப்பட்டதாக புகார் தெரிவித்து, அனுப்பியவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் 2 முதல் 5 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை மற்றும் 1 லட்சம் சவுதி ரியால் அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.