• HOME
  • »
  • NEWS
  • »
  • international
  • »
  • டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்... செனட் சபையில் காரசார விவாதம்

டிரம்ப் பதவி நீக்க தீர்மானம்... செனட் சபையில் காரசார விவாதம்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டிரம்ப்

முன்னாள் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவி நீக்க தீர்மானம் தொடர்பான விவாதம், செனட் சபையில் காரசாரமாக நடைபெற்றது.

  • Share this:
    அதிபர் தேர்தலில் ஜோ பைடன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை கண்டித்து அமெரிக்க நாடாளுமன்றத்தில் டிரம்ப் ஆதரவாளர்கள் வன்முறையில் ஈடுபட்டனர். இந்த தாக்குதலை தொடர்ந்து, டிரம்புக்கு எதிராக கடந்த ஜனவரி 13ம் தேதி பதவி நீக்க தீர்மானம் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்டது. அதன்பின் ஜோ பைடன் அரசு பதவியேற்பு நிகழ்வு காரணமாக செனட் சபையில் இந்த தீர்மானம் மீது விவாதம் நடைபெறுவது தள்ளிப்போனது. இந்நிலையில், செனட் சபையில் டிரம்ப் பதவிநீக்கம் தொடர்பான தீர்மானம் விவாதத்திற்கு கொண்டுவரப்பட்டது. முன்னதாக இந்தத் தீர்மானம் அரசியலமைப்புக்கு உட்பட்டதா என்பது குறித்து வாக்கெடுப்பு நடைபெற்றது.

    அதில் 56 பேர் செல்லும் என்றும், 44 பேர் செல்லாது எனவும் வாக்களித்தனர். பின்னர் விவாதம் தொடங்கிய நிலையில். அதில் பேசிய டிரம்ப் தரப்பு வழக்கறிஞர் டேவிட் சோய்ன், டிரம்ப் பதவி இழந்த பிறகு, இந்தத் தீர்மானம் கொண்டுவரப்பட்டிருப்பது அரசியலமைப்புக்கு எதிரானது எனவும், இதனால் தேசம் இரண்டாக உடையும் என்றும் எச்சரித்தார்.

    அதன்பிறகு செனட் சபை ஒத்திவைக்கப்பட்டது. இந்த தீர்மானம் மீது இரு தரப்பினரும் வாதங்களை முன் வைக்க தலா 16 மணி நேரம் அவகாசம் வழங்கப்பட உள்ளது. 100 உறுப்பினர்கள் கொண்ட செனட் சபையில், தீர்மானம் வெற்றிபெற மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை தேவை.

    மேலும் படிக்க... விவசாயிகளின் நலன் கருதி பயிர்க்கடன் தள்ளுபடி: 15 நாட்களுக்குள் ரசீது வழங்கப்படும் - முதல்வர்



    உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Vaijayanthi S
    First published: