முகப்பு /செய்தி /உலகம் / அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்... உருக்குலைந்த துருக்கி... 1300-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

அடுத்தடுத்து பயங்கர நிலநடுக்கம்... உருக்குலைந்த துருக்கி... 1300-க்கும் மேற்பட்டோர் பலியான சோகம்!

துருக்கி நிலநடுக்கம்

துருக்கி நிலநடுக்கம்

இன்று அதிகாலையில் 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaTurkeyTurkey

துருக்கி -சிரியா எல்லையில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் கட்டிட இடிபாடுகளில் சிக்கி 1300க்கும் மேற்பட்டவர்கள் ஏற்கனவே உயிரிழந்த நிலையில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.

துருக்கி-சிரியா இடையே உள்ள காசியான்டெப் நகரில் இன்று அதிகாலையில் 4 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.8 ஆக பதிவானது. இந்த நிலநடுக்கத்தில் துருக்கியிலும், சிரியாவிலும் 140க்கும் அதிகமான அடுக்குமாடி குடியிருப்புகள் இடிந்து விழுந்ததாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. துருக்கியைத் தொடர்ந்து, சிரியா, லெபனானிலும் நிலநடுக்கம் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. சுமார் 90 விநாடிகள் நீடித்த நிலநடுக்கத்தால் 1300 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளில் சிக்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகின.

அதானா,மலாத்யா ஆகிய துருக்கிய நகரங்களில் நிலநடுக்கத்தால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. மீட்புப்பணிகளில் செஞ்சிலுவைச் சங்கத்தினர் மற்றும் மீட்புப்படையினர் ஈடுபட்டுனர். இந்நிலையில் மீட்புப்பணி நடைபெற்று கொண்டிருக்கும் போதே மீண்டும் 7.6 ரிக்டர் அளவில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது.

ஏராளமானோர் காயமடைந்துள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை மேலும் உயரும் என்று அஞ்சப்படுகிறது. 100 பேர் கொண்ட பேரிடர் மீட்பு படையினரை இந்தியா துருக்கிக்கு அனுப்பி வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: Earthquake, Turkey