முகப்பு /செய்தி /உலகம் / சாதி பாகுபாட்டிற்கு தடை.... மசோதா நிறைவேற்றிய அமெரிக்காவின் முதல் நகரம்!

சாதி பாகுபாட்டிற்கு தடை.... மசோதா நிறைவேற்றிய அமெரிக்காவின் முதல் நகரம்!

சியாட்டில் நகர்மன்றம்

சியாட்டில் நகர்மன்றம்

சாதிய பாகுபாடு மற்ற நாடுகளில் மட்டும் இல்லை அமெரிக்காவிலும் உள்ளது - க்‌ஷாமா சாவந்த்

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • interna, IndiaSeattleSeattleSeattle

அமெரிக்கா சியாட்டில் நகர்மன்றத்தில் சாதிய பாகுபாட்டை தடை செய்யும் சட்டம் நிறைவேற்றப்பட்டது.

அமெரிக்காவில் சாதிய பாகுபாட்டை தடை செய்த முதல் நகரமாக சியாட்டில் நகரம் உருவெடுத்துள்ளது. அந்நகர கவுன்சில் கூட்டத்தில் எடுக்கப்பட்ட வாக்கெடுப்பின் இந்த படி சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தை முன்மொழிந்த சியாட்டில் நகர் கவுன்சிலர் க்‌ஷாமா சாவந்த், “சாதிய பாகுபாட்டிற்கு எதிரான இந்த போர் அனைத்து ஒடுக்குமுறைகளுக்கு எதிரான போர்” என தெரிவித்தார்.

இந்த சட்டத்தை ஆதரிப்பவர்கள், அமெரிக்காவில் சாதிய பாகுபாடு அதிகரிக்காமல் இருக்க இந்த சட்டம் மிக முக்கியமானது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து பேசிய க்‌ஷாமா, “சாதிய பாகுபாடு மற்ற நாடுகளில் மட்டும் இல்லை அமெரிக்காவிலும் உள்ளது. தென் ஆசிய அமெரிக்கர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் அவர்களது அலுவலகங்களில் சாதிய பாகுபாட்டால் பாதிக்கப்படுகின்றனர்” என தெரிவித்தார்.

இந்த நடவடிக்கையை எதிர்த்த சில ஹிந்து அமெரிக்க அமைப்பினர், ஏற்கனவே அமெரிக்க சட்ட இது போன்ற பாகுபாட்டை தடை செய்துள்ளது எனவும் தனியாக ஒரு சட்டம் தேவையில்லை எனவும் தெரிவித்தனர்.

மேலும் அவர்கள் வெளியிட்டுள்ள கடிதத்தில், இந்த சட்டம் ஒரு சமூகத்தினரை மட்டும் அவர்களது பூர்வீக நாடு மற்றும் பாரம்பரியத்தின் பெயரால் குறிவைக்கப்படுவதாக குற்றம்சாட்டினர். வாஷிங்டன் நகரில் 2 சதவீதமே இந்திய அமெரிக்கர்கள் உள்ளதாகவும் அவர்கள் மத்தியில் சாதிய பாகுபாடு நிலவுவதாக ஆதாரம் இல்லை எனவும் தெரிவித்தனர்.

First published:

Tags: Caste, United States of America