ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தால் தான் கொரோனா வைரஸ் பரவியது : ஸ்காட்லாந்து அரசியல்வாதி

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணத்தால் தான் கொரோனா வைரஸ் பரவியது : ஸ்காட்லாந்து அரசியல்வாதி

ஓரினச்சேர்க்கையாளர்

ஓரின சேர்க்கை திருமணங்களால் கொரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டது என்று ஸ்காட்டிஷ் அரசியல்வாதி ஒருவர் கூறியுள்ளார்.

  • Share this:
ஸ்காட்லாந்தின் ஷெட்லாந்து தொகுதியில் நடைபெறும் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கும் பீட்டர் டெய்ட் என்ற அரசியல்வாதியிடம், உள்ளூர் பத்திரிகையான The Shetland Times நேர்காணல் ஒன்றை நடத்தியது. அப்போது ஒரே பாலினத்தவர்களிடையே நடைபெறும் திருமணங்கள் காரணமாக கொடிய கொரோனா வைரஸ் தொற்று பரவியிருக்கலாம் என கூறி அதிரவைத்தார்.

கடவுள் விரும்பும் விஷயங்களை நான்  பிரதிநிதித்துவப்படுத்துகிறேன் என்று கூறிய பீட்டர் டெய்ட், நான் கூறும் கருத்துக்கள் எனது மத நம்பிக்கைகளின் அடிப்படையிலானது என்றார்.

ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் குறித்த கேள்விக்கு பதிலளித்துப் பேசிய பீட்டர் டெய்ட், இதனை நான் ஆதரிக்கவில்லை, நடைபெறும் தேர்தலில் நான் இதற்கு எதிராக போராடுவேன் என தெரிவித்ததுடன், கொரோனா வைரஸ் பரவல் கூட ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்தால் தான் ஏற்பட்டிருக்கும் என தெரிவித்தார். மேலும் இப்படி கருத்து கூறுவதால் தனக்கு எதிர்ப்பு கிளம்பும் என்பதையும் நான் உணர்ந்தே இருக்கிறேன் எனவும் கூறினார்.

பீட்டர் டெய்ட்டின் கருட்துக்கள் குறித்து LGBTQ உரிமை ஆர்வலர்கள் கூறுகையில் இப்படி ஒரு பார்வையை கொண்டிருக்கும் அவர் உண்மையில் ஒரு மடையர் என குறிப்பிட்டனர்.

கொரோனா வைரஸ் பரவல், ஓரின சேர்க்கை திருமணத்திற்கு ஒரு காரணம் என்ற அவரது அபத்தமான நம்பிக்கை ஒரு ஆபத்தான சதி கோட்பாடு மட்டுமல்ல, ஓரின சேர்க்கையாளர்களின் வெறுப்பை தூண்டவும் முடியும் மற்றும் நிச்சயமாக சமத்துவ சட்டம் 2010 ஐ இது மீறுகிறது என்றார்.

மேலும் கொரோனா வைரஸ் பரவலை ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணத்துடன் இணைத்து கருத்து கூறப்படுவடு இது முதல் முறை கிடையாது. ஏற்கனவே கடந்த ஆண்டு மார்ச்சில் உக்ரைனைச் சேர்ந்த கிறிஸ்துவ பாதிரியார் Patriarch Filaret என்பவர் ஓரின சேர்க்கையாளர்களின் திருமணம் போன்ற மனிதர்கள் செய்த பாவங்களுக்கான தண்டனை தான் கொரோனா வைரஸ், மனிதகுலத்தின் பாவத்தன்மை ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் என்றார். இந்த கருத்தை வெளியிட்ட பாதிரியார் Patriarch Filaret கடந்த ஆண்டு செப்டம்பரில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published: