செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சாத்தியக் கூறுகள் உள்ளனவா என்பது குறித்த ஆராய்ச்சி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதன்படி, பெர்சவரன்ஸ் விண்கலத்தை அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆய்வு மையம் அனுப்பிவைத்துள்ளது. செவ்வாய் கிரகத்தின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு சோதனை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, மனிதர்களை அனுப்புவதற்கான சாத்தியக் கூறுகள் குறித்து ஆய்வுகள் நடைபெறுகின்றன. இதன்படி, இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் உள்ள பாலைவனத்தில் அமைந்துள்ள ராமோன் பள்ளத்தாக்கில் ஆராய்ச்சிகள் நடைபெறுகின்றன.
இதனை இஸ்ரேல் விண்வெளி மையம், ஆஸ்திரிய சங்கம், உள்ளூரில் உள்ள டி-மார்ஸ் என்ற அமைப்பு ஆகியவை இணைந்து மேற்கொண்டு வருகின்றன. செவ்வாய் கிரகத்தைப்போன்றே சிவப்பு நிறத்தில் உள்ள இந்தப் பகுதியில் மலைப்பகுதியைக் குடைந்து ஆயிரத்து 300 சதுர அடியில் வீடுபோன்ற அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. இதில், ஆஸ்திரியா, இஸ்ரேல், ஜெர்மனி, நெதர்லாந்து, போர்ச்சுக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளைச் சேர்ந்த 5 விண்வெளி வீரர்களும், ஒரு விண்வெளி வீராங்கனையும் ஆய்வு மேற்கொள்கின்றனர். இவர்கள் 3 வாரங்களுக்கு இங்கு தங்கியிருப்பார்கள்.
கட்டிடத்துக்கு வெளியே வரும்போது, விண்வெளி உடை அணிந்துகொள்வார்கள். இதில், செவ்வாய் கிரகத்தில் வாழ்வதற்கான சூழல் உள்ளிட்டவை குறித்து 25 நாடுகளைச் சேர்ந்த 200 ஆராய்ச்சியாளர்கள் தயாரித்துள்ள 20-க்கும் மேற்பட்ட ஆய்வுகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த ஆராய்ச்சியின்போது, விண்வெளி வீரர், வீராங்கனைகளின் நடவடிக்கைகள் அனைத்தும் வீடியோவில் பதிவுசெய்யப்படும்.
மனிதர்களின் உடலில் ஏற்படும் மாற்றம் உள்ளிட்ட அம்சங்கள் ஆராயப்படும் என்று விண்வெளி அமைப்புகள் தெரிவித்துள்ளன. இது எதிர்காலத்தில் செவ்வாய் கிரகத்துக்கு மனிதர்களை அனுப்புவதற்கு உதவும் என்று விண்வெளி அமைப்புகள் தெரிவித்துள்ளன.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 46, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Isreal