முகப்பு /செய்தி /உலகம் / ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியுமா?- முடியும் என நிருபித்திருக்கும் புதிய உயிரினம்.!

ஆக்சிஜன் இல்லாமல் உயிர்வாழ முடியுமா?- முடியும் என நிருபித்திருக்கும் புதிய உயிரினம்.!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

இஸ்ரேலைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் ஆக்சிஜன் வாயுவே தேவைப்படாமல் உயிர்வாழக்கூடிய உயிரினம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர்.

  • Last Updated :

ஆக்சிஜன் இல்லாமல் உயிரினங்களால் வாழவே முடியாது. இந்த அடிப்படை அறிவியல்தான் இத்தனைக் காலம் நம்மை நகர்த்திக் கொண்டிருந்தது.

ஆனால், இந்த அடிப்படை அறிவியல் விதியையே புதிய உயிரினம் ஒன்று மாற்றியுள்ளது. இஸ்ரேலைச் சேர்ந்த அறிவியல் விஞ்ஞானிகள் ஆக்சிஜன் வாயுவே தேவைப்படாமல் உயிர்வாழக்கூடிய உயிரினம் ஒன்றைக் கண்டறிந்துள்ளனர். ஜெல்லி மீன் போன்றதொரு ஒட்டுண்ணிதான் ஆக்சிஜன் இன்றி உயிர்வாழக் கூடிய உயிரினமாகக் கண்டறியப்பட்டுள்ளது.

ஹென்னேகுயா சால்மினிகோலா என்னும் அந்த ஒட்டுண்ணி சால்மன் மீனுக்குள் வாழும் ஒரு வகை உயிரினம் ஆகும். இந்த ஒட்டுண்ணிக்கு ஆக்சிஜனை ஏற்றுக்கொள்ளும் உடல் அமைப்பே கிடையாதாம். ஆனால், இந்த ஒட்டுண்ணி எவ்வாறு தனக்குத் தேவையான ஆற்றலைப் பெறுகிறது என்ற கேள்விக்கான விடையை தற்போதுதான் ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு செய்து வருகின்றனர்.

top videos

    மேலும் பார்க்க: ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் மலாலா- க்ரெட்டா..! - இரு சர்வதேச போராளிகளின் சந்திப்பு ஏன்?

    First published: