‘க்ரேட் க்ராண்ட்ஃபாதர்’ என்று அழைக்கப்படும் பழங்கால அலர்ஸ் மரம் ஒன்று 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமையானதாக இருக்கலாம் என்று ஒரு சமீபத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. தெற்கு சிலியில் உள்ள பசுமையான காடு ஒன்றுதான் உலகின் பழமையான அந்த மரத்தின் தாயகமாக இருக்கிறது என்று ஆய்வு குறிப்பிட்டுள்ளது.
மரத்தின் மிகப்பெரிய தண்டு காரணமாக அவற்றின் அடிப்படையில் விஞ்ஞானிகளால் சரியான வயதைக் கண்டறிய முடியவில்லை. பொதுவாக, மர வளையங்களை எண்ண 1 மீட்டர் மர உருளை பிரித்தெடுக்கப்படும். ஆனால், இந்த ‘க்ரேட் க்ராண்ட்ஃபாதர்’-ன் தண்டு 4 மீட்டர் விட்டம் கொண்டதாக கணக்கிடப்பட்டுள்ளது. இதனால், அதன் சரியான வயதை கண்டறிவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
ஆய்வுக்கு தலைமை தாங்கிய விஞ்ஞானி ஜோனதன் பேரிச்சிவிச், பிரித்தெடுத்த மாதிரி மற்றும் பிற முறைகளை வைத்துப் பார்த்தால் அந்த மரம் 5,484 ஆண்டுகள் பழமையானதாக இருக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளார். ‘இந்த முறையானது, சாத்தியமான அனைத்து வளர்ச்சிப் பாதைகளிலும் 80 சதவிகிதம் இந்த உயிருள்ள மரத்தின் வயது சுமார் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு மேல் இருக்கும் என்பதை நமக்குச் சொல்கிறது’ என்று பேரிச்சிவிச் கூறியுள்ளார்.
மதிப்பிடப்பட்ட வயது, கலிபோர்னியாவில் உள்ள 4,853 ஆண்டுகள் பழமையான பிரிஸ்டில்கோன் பைன் மரத்தின் தற்போதைய சாதனையை இந்த ‘க்ரேட் க்ராண்ட்ஃபாதர்’ அலர்ஸ் மரம் முறியடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.ன் ‘அனைத்து மர வளையங்களையும் நாம் ஏற்கனவே தேதியிட்ட மரங்களுடன் ஒப்பிட்டுப் பார்த்தால், அது நிச்சயம் உலகின் பழமையான மரங்களில் ஒன்றாக மாறும்’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மனித நாகரிகத்தின் பல காலகட்டங்களில் இந்த மரம் தப்பிப் பிழைத்தாலும், அலர்ஸ் கோஸ்டெரோ தேசிய பூங்காவில் மரத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி பேரிச்சிவிச் கவலை கொள்கிறார். ஏனெனில், பார்வையாளர்கள் பெரும்பாலும் கண்காணிப்பு தளத்தை விட்டு வெளியேறி, மரத்தின் வேர்களை மிதித்து, அதன் பட்டையின் துண்டுகளை கூட எடுத்துக்கொள்கிறார்கள் என்றார். இதுபோன்ற சேதத்தைத் தடுக்க அமெரிக்காவில் இதே போன்ற மரங்களின் இருப்பிடத்தை ஆய்வாளர்கள் மறைத்து வைத்திருப்பதாக அவர் கூறினார்.
ஐந்தாயிரம் ஆண்டுகள் வாழ்வதன் அர்த்தம் என்ன என்பதைப் பற்றி ஒரு நொடியின் ஒரு பகுதியாவது மக்களால் சிந்திக்க முடியும் என்று அவர் நம்புவதாகவும், அவர்களின் வாழ்க்கையையும் காலநிலை நெருக்கடியையும் முன்னோக்கி வைக்க முடியும் என்றும் பேரிச்சிவிச் நம்பிக்கை தெரிவித்தார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: News On Instagram, Trending