Home /News /international /

இமயமலையை விடவும் 4 மடங்கு பெரியது-அழிந்து போன ‘சூப்பர்மலைகள்’-கண்டுப்பிடிப்பு

இமயமலையை விடவும் 4 மடங்கு பெரியது-அழிந்து போன ‘சூப்பர்மலைகள்’-கண்டுப்பிடிப்பு

மவுண்ட் எவரெஸ்ட் - படம் நாசா.

மவுண்ட் எவரெஸ்ட் - படம் நாசா.

எவரெஸ்ட் சிகரம், 8,848 மீட்டர் உயரமானது. இமயமலைத் தொடரில் எவரெஸ்ட் தான் மிக உயரமானது, ஆனால் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் மலைத்தொடர்கள் இமயமலைத் தொடரை விடவும் பெரிது. இமயமலையை விட நீண்ட, இந்த மலைத்தொடர்கள் பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது. பூமியின் வரலாறு முழுவதும் இந்த சூப்பர்மலைகள் உருவாவதை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்துள்ளனர்.

மேலும் படிக்கவும் ...
  எவரெஸ்ட் சிகரம், 8,848 மீட்டர் உயரமானது. இமயமலைத் தொடரில் எவரெஸ்ட் தான் மிக உயரமானது, ஆனால் கண்டம் முழுவதும் பரவியிருக்கும் மலைத்தொடர்கள் இமயமலைத் தொடரை விடவும் பெரிது. இமயமலையை விட நீண்ட, இந்த மலைத்தொடர்கள் பூமியின் பரிணாம வளர்ச்சிக்கு உதவியது. பூமியின் வரலாறு முழுவதும் இந்த சூப்பர்மலைகள் உருவாவதை ஆராய்ச்சியாளர்கள் கண்காணித்துள்ளனர்.

  8,000 கிலோமீட்டர்கள் வரை நீண்டு, அவை தற்போதைய இமயமலைத் தொடர்களின் (2,300 கிலோமீட்டர்) நீளத்தை விட கிட்டத்தட்ட நான்கு மடங்கு நீளமாக இருந்தன மற்றும் பூமியின் வரலாற்றில் இரண்டு முறை உருவானது - முதல் 2,000 முதல் 1,800 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு மற்றும் இரண்டாவது 650 முதல் 500 மில்லியன் வரையிலான ஆண்டுகளுக்கு முன்பு. இந்த இரண்டு சூப்பர் மவுண்டன் நிகழ்வுகளுக்கும் பூமியின் வரலாற்றில் இரண்டு முக்கியமான பரிணாம வளர்ச்சிக் காலங்களுக்கும் இடையே தொடர்பு இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் நம்புகின்றனர்.

  எர்த் அண்ட் பிளானட்டரி சயன்ஸ் லெட்டர்ஸ் இதழில் வெளியிடப்பட்ட இந்த ஆய்வில், குறைந்த லுடீடியம் என்ற பொருள் கொண்ட சிர்கானின் தடயங்களை ஆராய்ச்சியாளர்கள் பயன்படுத்தினர் உயர்ந்த மலைகளின் வேர்களில் மட்டுமே காணப்படும் கனிம மற்றும் அரிய பூமி கூறுகளின் கலவையானது தீவிர அழுத்தத்தில் உருவாகின்றன.

  இந்த இரண்டு நிகழ்வுகளுக்கு இடையில் எந்த நிலையிலும் மற்ற சூப்பர்மலைகள் உருவானதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்பது அந்த நிகழ்வுகளின் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது.

  ஆஸ்திரேலிய நேஷனல் யுனிவர்சிட்டியின் மாணவர் ஜியீ ஸூ, இந்த ஆய்வின் குழுவில் ஒருவர், அவர் கூறும்போது, “இன்று இந்த இரண்டு சூப்பர்மலைகளைப் போல் எதுவும் இல்லை. இது அவற்றின் உயரம் மட்டுமல்ல - 2,400 கிமீ நீளமுள்ள இமயமலையை மூன்று அல்லது நான்கு முறை திரும்பத் திரும்ப நிகழ்ந்துள்ளது என்பதை நீங்கள் கற்பனை செய்து பார்த்தால் இது குறித்த ஒரு ஐடியா கிடைக்கும்” என்றார்.

  முதல் சூப்பர்மவுண்டன்கள் நுனா சூப்பர்மவுண்டன் என்று அழைக்கப்படுகின்றன, இது யூகாரியோட்கள் என்ற ஒரு தீர்மானமான நியூக்ளியஸ் உள்ள செல்கள் ஆகும் இது அத்தகைய மூலாதார செல்கள் தோற்றத்துடன் ஒத்துப்போகிறது, பின்னர் தாவரங்கள் மற்றும் விலங்குகள் , உயிரினங்கள் இதிலிருந்து தோன்றின என்கிறது அறிவியல்.

  650 மற்றும் 500 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவான இரண்டாவது, டிரான்ஸ்கோண்ட்வானன் சூப்பர்மவுண்டன் என்பது முதல் மிகப்பெரிய விலங்குகள் தோன்றுவதுடன் ஒத்துப் போவதாக உள்ளது. இதோடு 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பான கேம்ப்ரியன் பெருவெடிப்புடனும் ஒத்துப் போகிறது. அதாவது பெரிய விலங்கினங்கள் புதைபடிவ பதிவேடுகளில் தோன்றிய காலத்துக்கு 45 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பாக தோன்றிய கேம்ப்ரியன் பெருவெடிப்புடன் தொடர்புடையது என்கின்றனர் இந்த ஆய்வாளர்கள்.

  மலைகள் அரிக்கப்பட்டபோது, ​​​​அவை கடல்களுக்கு பாஸ்பரஸ் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை வழங்கின, உயிரியல் சுழற்சிகளை சூப்பர்சார்ஜ் செய்து, பரிணாமத்தை அதிக சிக்கலான நிலைக்கு கொண்டு சென்றதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்தனர். சூப்பர்மலைகள் வளிமண்டலத்தில் ஆக்ஸிஜன் அளவை அதிகரித்திருக்கலாம்,

  ஆரம்பகால பூமியின் வளிமண்டலத்தில் கிட்டத்தட்ட ஆக்ஸிஜன் இல்லை. வளிமண்டல ஆக்ஸிஜன் அளவுகள் தொடர்ச்சியான படிகளில் அதிகரித்ததாகக் கருதப்படுகிறது, அவற்றில் இரண்டு சூப்பர்மலைகளுடன் ஒத்துப்போகின்றன என்கிறது இந்த ஆய்வு.

  புதிய கண்டுபிடிப்பு இன்று நாம் அறிந்த நமது பூமி மற்றும் பிற கிரகங்கள் பற்றியும் வாழ்க்கையின் பரிணாம வளர்ச்சியின் முக்கிய நுண்ணறிவுகளையும் வழங்க முடியும்.
  Published by:Muthukumar
  First published:

  Tags: Everest, Mount Everest, Science

  அடுத்த செய்தி