நீர் மாசுபாட்டால் இறால்கள் உடலில் போதைப் பொருட்கள் - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!

உப்பு இல்லாத குடிக்க ஏற்றது எனக் கூறப்படும் நன்னீரிலிருந்து பிடிக்கப்பட்ட இறாலில் எப்படி ரசாயன கலவைகள் உள்ளது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

news18
Updated: May 4, 2019, 3:02 PM IST
நீர் மாசுபாட்டால் இறால்கள் உடலில் போதைப் பொருட்கள் - அதிர்ச்சி அளிக்கும் ஆய்வு முடிவுகள்!
இறால்
news18
Updated: May 4, 2019, 3:02 PM IST
இங்கிலாந்தில் நன்னீரில் பிடிக்கப்பட்ட இறாலில் தடை செய்யப்பட்ட மருந்துகள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் கூறியுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

லண்டனில் செயல்பட்டு வரும் கிங்ஸ் கல்லூரில் செய்யப்பட்ட ஆய்வில் நன்னீரிலிருந்து பிடிக்கப்பட்ட இறாலில் தடை செய்யப்பட்ட மருந்துகள், பூச்சி மருந்துகள் போன்றவை இருந்துள்ளது.

எனவே 15-க்கும் மேற்பட்ட இடங்களிலிருந்து இறால்களைக் கொண்டு வந்து செய்த ஆய்வில் சிலவற்றில் கொகேயின் போதை மருந்துகளும் இருந்துள்ளன.

உப்பு இல்லாத குடிக்க ஏற்றது என கூறப்படும் நன்னீரிலிருந்து பிடிக்கப்பட்ட இறாலில் எப்படி ரசாயன கலவைகள் உள்ளது என்பது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

லண்டன் உள்ளிட்ட நகரப்பகுதி இறால்களில் தான் இப்படி ரசாயனங்கள் இருக்கும் என்று பார்த்தால் கிராமப்புறங்கிலிருந்து பிடிக்கப்பட்ட இறால்களில் விஷத்தன்மை உடைய கலவைகள் இருந்துள்ளன.

ஏற்கனவே தண்ணீரில் பிளாஸ்டிக் துகள்கள் அதிகம் உள்ளது என ஆய்வுகள் கூறி வரும் நிலையில், ஏறி, ஆறுகளில் பாயும் நன்னீர்களில் இப்படி உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தக்கூடிய கலப்படங்களும் கலந்துள்ளன.

பிளாஸ்டிக் துகள்களைச் சப்பிடும், உடல் நலத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் மருந்துகளை உட்கொள்ளும் கடல் சார் உயிரினங்களைச் சப்பிடும் போது அதில் மனிதர்களும் சேர்ந்து பாதிக்கப்படுவார்கள்.
Loading...
எனவே நீரில் கலந்துள்ள பிளாஸ்டிக் துகள்கள் மட்டுமல்லாமல் இது போன்ற மருந்துகள் குறித்தும் ஆய்வுகளை நடத்தி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என லண்டன் கிங்ஸ் கல்லூரியைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

மேலும் பார்க்க:
First published: May 4, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...