ஹோம் /நியூஸ் /உலகம் /

சூரியனுக்கு மிக அருகாமையில் வேகமாக சுழலும் ’சிறுகோள்’- வானியலாளர்கள் கண்டுபிடிப்பு!

சூரியனுக்கு மிக அருகாமையில் வேகமாக சுழலும் ’சிறுகோள்’- வானியலாளர்கள் கண்டுபிடிப்பு!

சிறுகோள்

சிறுகோள்

சூரியனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இந்தச் சிறுகோள், சூரியனில் இருந்து சுமார் 20 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

  • Trending Desk
  • 2 minute read
  • Last Updated :

சூரியனுக்கு மிக அருகாமையில் வேகமாக சுழலும் சிறுகோள் ஒன்றை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

சூரியக் குடும்பத்துக்கு உள்ளே மற்றும் வெளியே எண்ணிலடங்கா சிறுகோள்கள் இருக்கின்றன. அவற்றை அவ்வப்போது கண்டுபிடிக்கும்போது வானியலாளர்களுக்கு வியப்பு ஏற்படும். அந்தவகையில், புதன் கோளை விட மூன்று மடங்கு நெருக்கமாக, வேகமாக சுழலும் சிறுக்கோள் ஒன்றை வானியலாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர். சிலியில் உள்ள டார்க் எனர்ஜி கேமராவைப் பயன்படுத்தி, இந்தக் சிறுகோள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

டார்க் எனர்ஜி டீ கேம் (DECam) சர்வதேச ஒத்துழைப்பால் நிறுவப்பட்டுள்ள கேமராவாகும். 57 மெகாபிக்சல் டீ கேம் சுமார் ஒரு கிலோ மீட்டர் விட்டம் கொண்ட இந்த சிறுகோளை கண்டுபிடிக்க உதவியுள்ளது. புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட சிறுகோளுக்கு 2021PH27 என வானியலாளர்கள் பெயரிட்டுள்ளனர். இந்த சிறுகோளின் குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால், சூரியனின் சுற்றுவட்டப்பாதையை வெறும் 113 நாட்களில் முழுமையாக ஒருமுறை சுற்றி முடித்துவிடுகிறது. சூரிய மண்டலத்தில் இருக்கும் மற்ற எந்த சிறுகோளையும் விட வேகமான சிறுகோளாக 2021PH27 உள்ளது.

சூரியனுக்கு மிக நெருக்கமாக இருக்கும் இந்தச் சிறுகோள், சூரியனில் இருந்து சுமார் 20 மில்லியன் கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் புதன் கோளின் தொலைவை விட 3 மடங்கு நெருக்கமானதாகும். புதனுடன் ஒப்பிடும்போது இது குறைவான சுற்றுப்பாதை வேகத்தையேக் கொண்டிருக்கிறது. சூரியனின் சுற்றுப்பாதையை வெறும் 88 நாட்களில் புதன் கோள் வேகமாக சுற்றிவிடுகிறது.

சிறுகோள்களைப் பொறுத்தவரை சூரிய மண்டலத்தின் அண்ட பரிமணாமத்தின் நினைவுச்சின்னங்களாக இருக்கின்றன. பெரும்பாலான சிறுகோள்கள் முக்கிய சிறுகோள்கள் பெல்டில் வாழ்கின்றன. மில்லியன் கணக்கான ஆண்டுகளாக பரந்த சுற்றுப்பாதைகளில் சுழன்று வரும் அவை, சில கிலோ மீட்டர் முதல் 10 அடிக்கும் குறைவான விட்டம் கொண்ட உறைந்த விண்வெளிப் பாறைகள் ஆகும். அதனையே வானியலாளர்கள் சிறுகோள்கள் என குறிப்பிடுகின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த சிறுகோள் கண்டுபிடிப்பு குறித்து பேசிய வானியலாளர் ஸ்காட். எஸ்.ஷெப்பர்டு, சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் இந்த சிறுகோளின் மேற்பரப்பில் சுமார் 500 டிகிரி செல்ஷியஸ் அளவில் வெப்பநிலை இருக்கும் எனத் தெரிவித்துள்ளார். அதாவது ஈயம் உருகும் அளவிலான வெப்பநிலை இருக்கும் என விளக்கம் கொடுத்துள்ளார். இவர், வாஷிங்டன் டிசியில் உள்ள கார்னகி இன்ஸ்டியூஷன் ஃபார் சயின்ஸில் வேலை செய்து வருகிறார்.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி டீ கேம் வெளியிட்டப் படங்களை பகுப்பாய்வு செய்த அவர், இந்த தகவல்களை பகிர்ந்து கொண்டார். வானியலாளர்களின் கூற்றுபடி, சூரியனுக்கு அருகாமையில் இருக்கும் சிறுகோள்களை கண்டுபிடிப்பது என்பது எளிதான காரியமல்ல எனத் தெரிவிக்கின்றன. ஏனென்றால், சூரியனில் இருந்து வெளியாகும் ஒளிக்கதிர்களால் சிறுகோள்கள் மறைக்கப்படுவதே, சிறுகோள் கண்டுபிடிக்க முடியாததற்கு காரணம் என்றும் விளக்கம் அளித்துள்ளனர்.

உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்.

First published:

Tags: Asteroid, Science, Scientist