• HOME
 • »
 • NEWS
 • »
 • international
 • »
 • 80% செயல்திறனுடன் பாக்டீரியா எதிர்ப்பு கிராபென் முகக்கவசங்கள்: விஞ்ஞானிகளின் நுட்பமான வடிவமைப்பு...

80% செயல்திறனுடன் பாக்டீரியா எதிர்ப்பு கிராபென் முகக்கவசங்கள்: விஞ்ஞானிகளின் நுட்பமான வடிவமைப்பு...

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

முகக்கவசத்திற்கு உகந்த கட்டமைப்பை வடிவமைத்து சான்றிதழ்களை பெற்றவுடன் அதை விரைவில் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 • Share this:
  உலகளவில் தற்போது பரவியிருக்கும் கொரோனா நோய்த் தொற்றுக்கு எதிராகப் போராட 80 சதவிகிதம் பாக்டீரியா கிராபெனின் எதிர்ப்பு திறன் கொண்ட முகக்கவசங்களை ஹாங்காங்கில் விஞ்ஞானிகள் வெற்றிகரமாக தயாரித்துள்ளனர். மேலும் இது 10 நிமிடங்களுக்கு சூரிய ஒளியை வெளிப்படுத்துவதன் மூலம் எதிர்ப்பு திறனை கிட்டத்தட்ட 100 சதவீதமாக அதிகரிக்க முடியும் என்றும் விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

  ஏ.சி.எஸ் நானோ எனும் இதழில் வெளியிடப்பட்ட அறிக்கையின்படி, முதற்கட்ட சோதனைகள் இரண்டு வகை கொரோனா வைரஸ்களை செயலிழக்க செய்வதில் மிகவும் நம்பிக்கைக்குரிய முடிவுகளை கண்டுள்ளதாக கூறப்படுகிறது. கிராபெனின் முக கவசங்கள் குறைந்த செலவில் எளிதில் தயாரிக்கப்படுகின்றன.

  மேலும் மூலப்பொருட்களை சேர்ப்பது மற்றும் மக்காத முக கவசங்களை அப்புறப்படுத்துவது போன்ற சிக்கல்களை தீர்க்க இது உதவும்" என்று ஹாங்காங்கின் நகர பல்கலைக்கழகத்தின் (சிட்டியு) ஆய்வு ஆசிரியர்கள் தெரிவித்தனர். பொதுவாக பயன்படுத்தப்படும் அறுவை சிகிச்சை முக கவசங்கள் பாக்டீரியா எதிர்ப்பு திறன் கொண்டது இல்லை.

  மேலும் படிக்க: ’எந்த லாஜிக்கும் இல்லையே’ - நீட் தேர்வை எதிர்க்கும் சூர்யாவின் அறிக்கைக்கு காயத்ரி ரகுராம் பதில்..

  பயன்படுத்தப்பட்ட முகக்கவசங்களின் அசுத்தமான மேற்பரப்புகளை மக்கள் தொடும்போது அல்லது அவற்றை தவறுதலாக தூக்கி எறியும் போதும், அதில் இருக்கும் பாக்டீரியாவின் தொற்று இரண்டாம் நிலை பரவும் அபாயத்திற்கு வழிவகுக்கும் என்பதை ஆராய்ச்சியாளர்கள் தகவல் அளிக்கின்றனர். இதுகுறித்து பேசிய ஆய்வின் முக்கிய ஆராய்ச்சியாளரான டாக்டர் யே ருகுவான், கிராபெனின் அதன் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.

  எனவே கடந்த செப்டம்பர் மாத தொடக்கத்தில், கோவிட் -19 எனும் நோய் பரவுவதற்கு முன்பு, லேசர் தூண்டப்பட்ட கிராபெனுடன் செயல்திறன் மிக்க முக கவசங்களை தயாரிப்பது குறித்து ஏற்கனவே டாக்டர் யே ருகுவானின் மனதில் எண்ணம் தோன்றியதாக கூறப்படுகிறது. அதன்படி தயாரித்த லேசர் தூண்டப்பட்ட கிராபெனை முக கவசத்தை ஆய்வுக் குழு மூலம் சோதித்தது. அப்போது இது சுமார் 82 சதவீத உயர் பாக்டீரியா எதிர்ப்பு செயல்திறனை அடைந்துள்ளது தெரியவந்தது.  இதை ஒப்பிடுகையில், செயல்படுத்தப்பட்ட  கார்பன் ஃபைபர் மற்றும் உருகும் துணிகளின் முகக் கவசத்தில் பாக்டீரியா எதிர்ப்பு செயல்திறன், பொதுவாக முறையே பயன்படுத்தப்படும் பொருட்கள் 2 சதவீதம் மற்றும் 9 சதவீதம் மட்டும் தான் என்று கண்டறியப்பட்டுள்ளது. சோதனை முடிவுகளில், 90 சதவிகிதத்திற்கும் அதிகமான ஈ - கோலி, 8 மணி நேரத்திற்குப் பிறகும் உயிருடன் இருப்பதை காட்டியுள்ளது.

  க்ராபென் மாஸ்க்


  அதே நேரத்தில் கிராபெனின் மேற்பரப்பில் வைக்கப்பட்டிருந்த பெரும்பாலான ஈ.கோலை எட்டு மணி நேரத்திற்குப் பிறகு இறந்து விட்டுள்ளது. மேலும், லேசர் தூண்டப்பட்ட கிராபெனின் ஏரோசோலைஸ் செய்யப்பட்ட பாக்டீரியாக்களுக்கு, ஒரு சிறந்த பாக்டீரியா எதிர்ப்பு திறனாக செயல்படுவது தெரியவந்துள்ளது.

  ஆனால், இது கிராபெனின் கூர்மையான விளிம்பால் பாக்டீரியா உயிரணு சவ்வுகளின் சேதத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும், மற்றும் கிராபெனின் ஹைட்ரோபோபிக் (நீர் விரட்டும்) தன்மை தூண்டப்பட்ட நீரிழப்பால் பாக்டீரியாக்கள் கொல்லப்படலாம் என்றும் டாக்டர் யே ருகுவான் கூறினார். மேலும் கிராபெனின் பாக்டீரியாவைக் கொல்லும் சரியான வழிமுறை குறித்து மேலும் ஆராய்ச்சி தேவை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  முந்தைய ஆய்வுகள் கோவிட் -19 அதிக வெப்பநிலையில் அதன் தொற்றுநோயை இழக்கும் என்று கூறியது. ஆகவே, கிராபெனின் ஒளிக்கதிர் விளைவு (ஒளியை உறிஞ்சிய பின் வெப்பத்தை உருவாக்குகிறது) பாக்டீரியா எதிர்ப்பு விளைவை அதிகரிக்க முடியுமா என்பதை சோதிக்க குழு சோதனைகளை மேற்கொண்டது.

  கிராஃபீனின் பாக்டீரியா எதிர்ப்பு செயல்திறன், சூரிய ஒளியின் கீழ் 10 நிமிடங்களுக்குள் 99.998 சதவீதமாக மேம்படுத்தப்படலாம் என்று முடிவுகள் காண்பித்துள்ளது. அதே நேரத்தில் செயல்படுத்தப்பட்ட கார்பன் ஃபைபர் மற்றும் உருகிய துணிகள் முறையே 67 சதவீதம் மற்றும் 85 சதவீதம் மட்டுமே செயல்திறனைக் காட்டியுள்ளது. இந்த ஆராய்ச்சிக் குழு தற்போது சீனாவின் பிரதான நிலப்பரப்பில் உள்ள ஆய்வகங்களுடன் இணைந்து கிராபெனின் பொருளை, இரண்டு வகையான மனித கொரோனா வைரஸ்களுடன் சோதிக்கிறது.

  அவர்களின் அடுத்த கட்டம் வைரஸ் எதிர்ப்பு செயல்திறனை மேலும் மேம்படுத்துவதோடு, முக கவசத்தை மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் உருவாக்குவதும் ஆகும். மேலும் முக கவசத்திற்கு உகந்த கட்டமைப்பை வடிவமைத்து சான்றிதழ்களை பெற்றவுடன் அதை விரைவில் சந்தையில் விற்பனைக்கு வெளியிடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

  Published by:Gunavathy
  First published: