ஹோம் /நியூஸ் /உலகம் /

இனி ஏசி தேவையில்லை.. இந்த வெள்ளை பெயிண்டை அடித்தால் போதும்.. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

இனி ஏசி தேவையில்லை.. இந்த வெள்ளை பெயிண்டை அடித்தால் போதும்.. ஆராய்ச்சியாளர்களின் புதிய கண்டுபிடிப்பு!

இனி ஏசி தேவையில்லை

இனி ஏசி தேவையில்லை

1000 சதுர அடி கொண்ட மாடி பரப்பளவை இந்த பெயிண்டால் ஒரு கோட் அடிக்கும் போது ஏசி மூலம் 10 கிலோவாட் மின் ஆற்றலை எடுத்துக்கொண்டால் என்ன குளிர்ச்சி கிடைக்குமோ அது ஆற்றல் இல்லாமலே கிடைக்கும்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

ஆராய்ச்சியாளர்கள் தூய்மையான வெள்ளை நிற பெயிண்டை கண்டுபிடித்துள்ளனர், இந்த பெயிண்டை அடித்தால் போதும் வீட்டுக்கு ஏசியே தேவையில்லையாம்.

அமெரிக்காவில் உள்ள பர்டியூ பல்கலைக்கழகத்தின் பரிசோதனைக்கூடத்தில் ஆராய்ச்சியாளர்கள் உலகிலேயே அடர் வெள்ளை நிற பெயிண்டை உருவாக்கியுள்ளனர். இதுவே தூய வெண்மை நிறம் கொண்ட பெயிண்ட் என்ற கின்னஸ் உலக சாதனையையும் இந்த பெயிண்ட் படைத்திருக்கிறது. ஆனால் உலக சாதனை படைக்க வேண்டும் என்பது ஆராய்ச்சியாளர்களின் நோக்கல் அல்ல. உலக வெப்பமயமாதலை தடுக்கும் வகையில் மட்டுமே இந்த பெயிண்டை ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கினர்.

சூரிய வெப்பத்திலிருந்து கட்டிடத்தை தடுப்பது மட்டுமே இந்த பெயிண்ட் உருவாக்கப்பட்டதன் நோக்கமாகும். இந்த பெயிண்ட் குறித்து பர்டியூ பல்கலைக்கழக மெக்கானிக்கல் எஞ்சினியரிங் பிரிவின் பேராசிரியர் ருவான் கூறுகையில், “7 ஆண்டுகளுக்கு முன் ஆற்றலை மிச்சப்படுத்துவதும், காலநிலை மாற்றம் குறித்து மட்டுமே எங்கள் எண்ணம் இருந்தது. அதன் மூலம் உருவானதே இந்த தூய வெள்ளை பெயிண்ட். இந்த பெயிண்ட் சூரிய வெளிச்சத்தை அதிகளவில் பிரதிபலிக்கும்.

ஆராய்ச்சியாளர்கள்

இந்த பெயிண்ட் 98.1% அளவுக்கு சூரிய கதிர்வீச்சை பிரதிபலிப்பதுடன், இன்ஃபிரார்டு வெப்பத்தையும் தடுக்கிறது. இது பிரதிபலிக்கும் வெப்பத்தை விட மிகவும் குறைந்த அளவே வெப்பத்தை கிரகித்துக் கொள்கிறது. இந்த பெயிண்ட் அடிக்கப்படும் கட்டிடம் எந்த ஆற்றலையும் எடுத்துக்கொள்ளாமலே சுற்றுப்புற வெப்பநிலையை குளிர்வாக வைக்கிறது.

Also Read : டிவிஎஸ் ரெய்டர் Vs ஹோண்டா எஸ்பி 125: கம்யூட்டர் செக்மெண்டில் எது சிறந்த பைக்? – முழு விவரம்

1000 சதுர அடி கொண்ட மாடி பரப்பளவை இந்த பெயிண்டால் ஒரு கோட் அடிக்கும் போது ஏசி மூலம் 10 கிலோவாட் மின் ஆற்றலை எடுத்துக்கொண்டால் என்ன குளிர்ச்சி கிடைக்குமோ அது ஆற்றல் இல்லாமலே கிடைக்கும். பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஏசிக்களை காட்டிலும் இது அதிக ஆற்றல் வாய்ந்ததாகும்,

Also Read: அமரிந்தர் சிங் ராஜினாமா செய்வதாக கூறிய போது சோனியா காந்தி கூறியது என்ன?

சந்தைகளில் கிடைக்கும் சாதாரண வெள்ளை பெயிண்ட் 80% முதல் 90% சூரிய வெப்பத்தை பிரதிபலிக்கும், மேலும் இவை சூரிய வெப்பத்தை பெருமளவில் தடுக்காது.

இந்த பெயிண்டை சந்தைப்படுத்துவதற்காக நிறுவனம் ஒன்றுடன் ஆராய்ச்சியாளர்கள் ஒப்பந்தம் செய்திருக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Published by:Arun
First published:

Tags: AC, News On Instagram, Painting