நுகர்வோருக்கு நாள்பட்ட நச்சுத்தன்மையை ஏற்படுத்தும் தற்போதைய ப்ரீஸர்வேட்டிவ் டிப்பிங் தொழில்நுட்பத்தைப் போலல்லாமல், இந்த மறுபயன்பாட்டு ரேப்பர்களானது தேவைப்படும்போது மட்டுமே ப்ரிஸர்வேட்டிவை வெளியிடுகிறது.
எனவே இந்த ரேப்பரை மீண்டும் பயன்படுத்தலாம். இது தற்போதைய தொழில்நுட்பத்தால் சாத்தியமில்லை என்று திங்களன்று வெளியான ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பழங்கள் வெகு விரைவில் வீணாகும் தன்மை கொண்டது. அதனால் உற்பத்தி செய்யப்படும் 50 சதவீத பழங்கள் வீணாகி விவசாயிகளுக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்துகிறது. இதற்காக பழங்கள் ப்ரிஸர்வேட்டிவ் செய்யப்படுகின்றன. வழக்கமான ப்ரீஸர்வேட்டிவ் என்பது பழங்கள் கெடாமல் இருக்க அதன் மீது பிசின், மெழுகு அல்லது சமையல் பாலிமர் போன்ற பூச்சுகள் பூசப்படும். இது ஒருவருக்கு நாள்பட்ட சுகாதார பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது.
ALSO READ | ஜப்பானின் நாகசாகி மீது அணுகுண்டு வீசப்பட்ட தினம் இன்று..
இந்த சிக்கலை தீர்க்கும் பொருட்டு, பி.எஸ் தலைமையிலான ஆராய்ச்சியாளர்கள் குழு, மொஹாலியின் நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனத்தைச் சேர்ந்த மருத்துவர் விஜயகுமார், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் தன்னாட்சி நிறுவனமான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சகம் ஆகியவை இணைந்து ஒரு மாற்று வழியைத் தேடினர். அவர்கள் கண்டுபிடித்த இந்த பொருள் கழிவுகளிலிருந்து உருவாக்கப்பட்டதாகும். மேலும் இவை பழங்கள் ப்ரிஸர்வேட்டிவ்களை உறிஞ்சுவதற்கு வழிவகை செய்யாது.
இந்த கண்டுபிடிப்பில், செயல்படுத்தப்பட்ட கிராபெனின் ஆக்சைடு-ஏற்றப்பட்ட மூலக்கூறுகள் பின்னர் ப்ரிஸர்வேட்டிவ்களுடன் ஏற்றப்படுகின்றன. இந்த அதிகப்படியாக ப்ரிஸர்வேட்டிவ் செய்யப்பட்ட கிராபெனின் ஆக்சைடு, பழங்கள் வைக்க பயன்படுத்தப்படும் காகிதத்தில் போடப்படும் போது, மேலும் பழத்தில் நச்சுப் ப்ரிஸர்வேட்டிவ்கள் இல்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் பழம் அதிகமாக பழுக்கும்போது அல்லது நோய்க்கிருமிகளால் பாதிக்கப்படும்போது, அமிலங்கள், சிட்ரிக் மற்றும் ஆக்சாலிக் அமிலங்கள் சுரப்பதன் மூலம் அமிலத்தன்மை அதிகரிக்கிறது.
ALSO READ | 3700 ஆண்டுகள் பழமையான புராதன சின்னம் கண்டுபிடிப்பு.. கணித வரலாற்றின் முக்கிய மைல்கல்!
பழங்களைப் ப்ரிஸர்வேஷன் செய்வதற்கான ப்ரிஸர்வேட்டிவ்களை இந்த காகிதம் வெளியிடுகிறது. இல்லையெனில், கார்பன் ரேப்பருடன் பழங்கள் பாதுகாப்பாக இருக்கும். பழங்களை டிப்பிங் செய்யும் முறையில், பழத்துடன் சேர்த்து ப்ரிஸர்வேட்டிவ் பொருளும் நீக்கப்படும். அதேசமயம் அடுத்த தொகுதி பழங்களை பாதுகாப்பதற்காக பழத்தை உட்கொண்ட பிறகு இந்த ரேப்பர்களை மீண்டும் பயன்படுத்தலாம்.
இந்த நச்சுத்தன்மையற்ற மற்றும் மீண்டும் பயன்படுத்தக்கூடிய மடக்கு காகிதத்தை உருவாக்க, ஆய்வுக்குழு கார்பன் மேட்ரிக்ஸை ப்ரிஸர்வேட்டிவ்வோடு அடைகாக்க அனுமதித்தது. அறை வெப்பநிலையில் 24 மணிநேரத்திற்கு அடைகாத்த பிறகு, கூடுதல் ப்ரிஸர்வேட்டிவ்களை அகற்றுவதற்காக பல முறை கழுவப்பட்டது. இறுதியாக, இந்த கார்பன் ப்ரிஸர்வேட்டிவ் கலவை காகிதத்தில் சேர்க்கப்பட்டது. இந்த கண்டுபிடிப்புகள் "ஏசிஎஸ் ஆப்லைடு மெட்டீரியல்ஸ் அண்ட் இன்டர்பேஸ்" இதழில் வெளியிடப்பட்டுள்ளது.
ALSO READ | ஆஸ்திரேலியாவில் அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா வைரஸ் - இந்த ஆண்டில் இல்லாத அளவு பாதிப்பு
இந்த ஆய்வு குறித்து டாக்டர் விஜயகுமார் கூறியதாவது, "ஏற்கனவே கழிவுகளிலிருந்து பெறப்பட்ட கார்பன் பொருட்கள் அதிக அளவு கரிம மூலக்கூறுகளை கொண்டவையாக அறியப்படுகிறது. எனவே பழத்தை பாதுகாப்பதற்காக ப்ரிஸர்வேட்டிவ் ஏற்றப்பட்டு தயாரிக்கப்பட்ட கார்பன் காகிதத்தில் போடப்படுகிறது. கரிம மூலக்கூறுகளை வைத்திருக்கும் கார்பனின் திறனை அதிகரிப்பது இந்த தயாரிப்பை உருவாக்க எங்களுக்கு உதவியது " என்று கூறியுள்ளார்.
பழங்களின் அடுக்கு ஆயுளை நீட்டிப்பதன் மூலம் இந்த புதிய தயாரிப்பு விவசாயிகளுக்கும் உணவுத் தொழிலுக்கும் பயனளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழத்திற்கு இந்த ரேப்பரை பயன்படுத்துவது வாடிக்கையாளருக்கு ஆரோக்கியமான தரத்துடன் பழங்களைப் விற்பனை செய்வதை உறுதி செய்யும். ஏனெனில் ஆராய்ச்சியாளர்கள் பினோல் உள்ளடக்கத்தில் முன்னேற்றம் கண்டுள்ளனர்.
இந்த கிராபெனின் பழ ரேப்பரின் உற்பத்திக்கு உயிரி வெப்பத்தை உற்பத்தி செய்யும் கார்பன் மட்டுமே தேவைப்படுகிறது. எனவே இது உயிரியல் நுகர்வு மற்றும் வேலைவாய்ப்பு உற்பத்தியிலும் பயனளிக்கும் என்று அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.