பூமியைவிட பெரிய ஆஸ்டிராய்டு எதுவும் நம்மைத் தாக்க வாய்ப்பில்லை - ஆய்வாளர் விளக்கம்

'தொடர்ந்து ஆப்போஃபிஸ் என்றதொரு ஆஸ்டிராய்டை மட்டும் ஆய்வாளர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்'.

Web Desk | news18
Updated: September 5, 2019, 3:40 PM IST
பூமியைவிட பெரிய ஆஸ்டிராய்டு எதுவும் நம்மைத் தாக்க வாய்ப்பில்லை - ஆய்வாளர் விளக்கம்
மாதிரிப்படம்
Web Desk | news18
Updated: September 5, 2019, 3:40 PM IST
பூமியை விண்கல், ஆஸ்டிராய்டுகள் விரைவில் தாக்கல் என்ற செய்தி பரவலாகப் பரவி வருகிறது. ஆனால், இதில் உண்மையில்லை என விளக்கியுள்ளார் ஆய்வாளர் லீவைஸ் டார்ட்நெல்.

பிரிட்டனின் வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தில் அறிவியல் தொடர்பியல் ஆய்வாளர் ஆக உள்ளார் முனைவர் லீவைஸ் டார்ட்நெல். பிரபல டெட் எக்ஸ் பேசாளரான டார்ட்நெல் சமீபத்தில் பூமியைத் தாக்கும் ஆஸ்டிராய்டு குறித்த விளக்கங்களை எடுத்துரைத்தார்.

அவர் மேஷபிள் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “ஆஸ்டிராய்டு தாக்குதலால் பூமிக்கு ஆபத்து உள்ளது என்ற கருத்தில் உண்மையில்லை. இனி வரும் காலங்களிலும் இதுபோன்ற ஆஸ்டிராய்டு தாக்குதலுக்கு வாய்ப்பில்லை. பூமியை மோதித்தாக்கும் அளவுக்கு ஒரு பெரிய ஆஸ்டிராய்டு கிடையாது.


இதனால் ஆஸ்டிராய்டு தாக்கி எல்லாம் பூமிக்கு அழிவு இல்லை. பூமியைத் தாக்கும் வாய்ப்புள்ள ஆஸ்டிராய்டுகள் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில் கண்டறியப்பட்ட ஆஸ்டிராய்டுகள் எதுவும் பெரிய அளவில் இல்லை. ஆனால், தொடர்ந்து ஆப்போஃபிஸ் என்றதொரு ஆஸ்டிராய்டை மட்டும் ஆய்வாளர்கள் தொடர்ந்து கவனித்து வருகின்றனர்” என்றார்.

மேலும் பார்க்க: சீரமைக்கப்படாத மதுரை மீனாட்சி கோவில்!
First published: September 5, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...