முகப்பு /செய்தி /உலகம் / மீண்டும் பரவும் கொரோனா... சீனாவில் பள்ளிக் கூடங்களை மூட அதிரடி உத்தரவு..!

மீண்டும் பரவும் கொரோனா... சீனாவில் பள்ளிக் கூடங்களை மூட அதிரடி உத்தரவு..!

சீன பள்ளிகள்

சீன பள்ளிகள்

பள்ளி ஒன்றில் ஒரே வகுப்பறையில் 2ம் வகுப்பு படிக்கும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Chennai [Madras] |

சீனாவின் உகான் மாகாணத்தில் 2019 டிசம்பரில் தொடங்கிய கொரோனா வைரஸ் பெருந்தொற்று உலகத்தையே 2 ஆண்டுகளுக்கும் மேலாக ஸ்தம்பிக்க வைத்தது. ஊரடங்கு, சமூக இடைவெளி, தனிமைப்படுத்துதல் என்று பல வழிமுறைகளை கையாண்டு உலக நாடுகள் கொரோனாவில் இருந்து வெளியே வந்துள்ளன. ஆனால், நோய் தொற்று தொடங்கிய சீனாவில் நோய் பரவல் என்பது இன்றும் தொடர்ந்து வருகிறது.

மற்ற உலக நாடுகள் கடும் கட்டுப்பாடுகளை விதித்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்த நேரத்தில் சீனா தனது கட்டுப்பாடுகளை தளர்த்தி மக்களை சாதாரணமாக நடமாட அனுமதித்தது. அதன் விளைவாக சீனாவில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளது. குறிப்பாக உருமாறிய கொரோனா தாக்கம் குழந்தைகளிடையே அதிகமாக பரவி வருகிறது.

கடந்த வார இறுதியில் வர்த்தக மையமான ஹாங்ஜோவ் நகரத்தில் உள்ள பள்ளி ஒன்றில் ஒரே வகுப்பறையில் இரண்டாம் வகுப்பு படிக்கும் 10 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் உள்ளூர் கல்வி அதிகாரிகள் திங்கட்கிழமை முதல் நான்கு நாட்களுக்கு வகுப்புகளை நடத்த வேண்டாம் என்று அறிவுறுத்தினர். இந்நிலையில் இந்த வார தொடக்கத்தில் இருந்து மாறுபட்ட கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுப்பதற்காக பல நகரங்களில் உள்ள பள்ளிக்கூடங்கள் மூடப்பட்டுள்ளன.

இதே போன்று தொழில் நகரமான ஷாங்காயில் ஒரே நேரத்தில் 4 மாணவர்களுக்கு வைரஸ் காய்ச்சல் இருப்பது கண்டறியப்பட்டது. மேலும் அதே பள்ளியில் உள்ள பலருக்கு நோய் தொற்று அறிகுறிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, ஷாங்காய் ஆரம்பப் பள்ளியில் நேரில் கற்பிப்பது நிறுத்தப்பட்டு உள்ளது.

இந்த இரு நகரங்கள் மட்டுமல்லாது ஜேஜியாங் மாகாணம், சீன தலைநகர் பீஜிங் மற்றும் அருகிலுள்ள நகரமான தியான்ஜின் போன்ற நகரங்கள் முழுவதும் உள்ள மற்ற பள்ளிகளிலும் காய்ச்சல் பாதிப்புகள் காரணமாக வகுப்புகள் நிறுத்தப்பட்டுள்ளன. மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று தெரியாத நிலையில் பள்ளி குழந்தைகளிடையே கொரோனா பரவல், மற்றும் பாதிப்பை தடுப்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

First published:

Tags: China, Corona