ஈரானின் பெண் குழந்தைகள் பள்ளிக்குச் சென்று கல்வி கற்பதைத் தடுக்க விஷம் கொடுத்த செய்த சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஈரானின் அமைச்சகம் இந்த தகவலை உறுதிப்படுத்தியுள்ளனர். குறிப்பாகப் புனித நகரமாகப் பார்க்கப்படும் கோம் நகரில் அதிக சிறுமிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டது தெரியவந்துள்ளது.
புனித நகரமான கோம் நகரில் பள்ளிக்குச் செல்லும் பெண் குழந்தைகளை மட்டும் குறிவைத்து சில நபர்கள் விஷம் கொடுத்துள்ள சம்பவம் நடைபெற்றுள்ளது. இதுவரை இதற்குத் தொடர்புடைய குற்றவாளிகள் என்று யாரையும் கைது செய்யவில்லை.
இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சர் யூனஸ் பனாஹி (Younes Panahi) கூறுகையில், கோம் நகர் பள்ளிகள் பல பெண் மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்டுள்ளது என்பது உண்மை தான் என்று தெரிவித்துள்ளார். பெண்கள் கல்வி பெறுவதைத் தடுப்பதற்காகவே சிலர் இது போன்று செய்துவருவதாகவும், பெண்களுக்கான பள்ளிகளை மூட வலியுறுத்திச் செயல்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
நூற்றுக்கும் மேற்பட்ட பெண் மாணவிகளுக்கு விஷம் அளிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. மேலும் அதில் சிலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாணவிகளின் பெற்றோர்கள் பிப்ரவரி 14 ஆம் நாள் அரசிடம் விளக்கம் கேட்டு போராட்டம் நடத்தியதையடுத்து இந்த சம்பவம் தற்போது உலகரங்கில் வெளிசத்திற்கு வந்துள்ளது. நீதிமன்றத்தில் இந்த சம்பவம் குறித்து வழங்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read : உக்ரைனுக்கு ஆயுதம் வழங்க எதிர்ப்பு... பிரான்ஸில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு போராட்டம்..!
ஈரானில் 22 வயது குர்த் மஹ்சா அமினி என்ற பெண்ணை ஹிஜாப் ஒழுங்காக அணியவில்லை என்று காவல்துறையினர் அடித்து கொன்ற கொடூரமான சம்பவத்தைத் தொடர்ந்து உலகளவில் போராட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, தற்போது பள்ளி செல்லும் பெண் மாணவிகளை விஷம் கொடுத்துக் கொல்லும் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Education, Girl students, Iran