சவுதியில் 2 இந்தியர்களுக்கு தலை துண்டித்து தண்டனை

மது அருந்தி சண்டையிட்ட வழக்கில் அவர்களுடைய சிறை தண்டனை முடிந்து வெளியே செல்லும்போது, அந்நாட்டு முறைப்படி அவர்களுடைய கைரேகை வாங்கப்பட்டுள்ளது.

Karthick S | news18
Updated: April 17, 2019, 10:50 PM IST
சவுதியில் 2 இந்தியர்களுக்கு தலை துண்டித்து தண்டனை
மாதிரி படம்
Karthick S | news18
Updated: April 17, 2019, 10:50 PM IST
சவுதி அரேபியாவில் கொலை குற்ற வழக்கில் இரு இந்தியர்கள் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டுள்ளனர். அந்நாட்டிலுள்ள இந்திய தூதரகத்துக்கு தகவல் தெரிவிக்காமல் அவர்களுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

பஞ்சாப் மாநிலம் ஹோசியர்பூர் மாவட்ட நிர்வாகத்திடம் சத்விந்தர் குமார் என்பவரின் மனைவி சீமா ராணி, சவுதி அரேபியாவில் உள்ள அவரது கணவரின் நிலை என்ன என்று கண்டுபிடித்த தர வேண்டும் என்று கோரிக்கை வைத்திருந்தார். அவருக்கு திங்கள் கிழமை, வெளியுறவுத்துறை அமைச்சகம் கடிதம் மூலம் பதிலளித்துள்ளது.

அந்த பதிலில், ‘சத்விந்தர் குமார் மற்றும் ஹர்ஜூத் குமார் ஆகியோர் 2015-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 9-ம் தேதி அரிஃப் இமாமுதின் என்ற இந்தியரைக் கொலை செய்த வழக்கில் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக, இருவரும் மது அருந்திவிட்டு சண்டையிட்ட வழக்கில் தமாம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மது அருந்தி சண்டையிட்ட வழக்கில் அவர்களுடைய சிறை தண்டனை முடிந்து வெளியே செல்லும்போது, அந்நாட்டு முறைப்படி அவர்களுடைய கைரேகை வாங்கப்பட்டுள்ளது.

அப்போது, இமாம்முதின் என்ற இந்தியரின் கொலை வழக்கில் அவர்களுக்கும் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. உடனே, அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர். பின்னர், இருவரும் ரியாத் சிறைக்கு அனுப்பப்பட்டனர். விசாரணையில் இருவரும் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.

இந்த ஆண்டு பிப்ரவரி 28-ம் தேதி அந்நாட்டு முறைப்படி இருவரும் தலை துண்டிக்கப்பட்டு தண்டிக்கப்பட்டனர்.

Loading...

அவர்களுக்கு தண்டனை அளிக்கப்படுவது இந்திய தூதரக அதிகாரிகளுக்கு தெரிவிக்கப்படவில்லை’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. உயிரிழந்தவர்களின் உடலை உறவினர்கள் இதுவரையில் வாங்கமுடியாமல் போராடி வருகின்றனர். ஏப்ரல் மாத இறுதியில் இறப்பு சான்றிதழ் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Also see:

First published: April 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...