Home /News /international /

சவுதி அரேபியாவுடன் மீண்டும் துளிர்க்கும் நட்பு.. பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்!

சவுதி அரேபியாவுடன் மீண்டும் துளிர்க்கும் நட்பு.. பாகிஸ்தானுக்கு ஜாக்பாட்!

imran khan

imran khan

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார்.

காஷ்மீர் விவகாரத்தில் ஆதரவு தராததால் சவுதி அரேபியாவுடன், கசந்து போன நட்பை பாகிஸ்தான் மீண்டும் புதுப்பித்துள்ளது. இதன் மூலம் பில்லியன் டாலர்கள் கணக்கில் பலனடைய இருக்கிறது பாகிஸ்தான்.

கசந்து போன உறவு:

அண்டை நாடான பாகிஸ்தான் பொருளாதார ரீதியில் பெரும் நெருக்கடியை சந்தித்து வரும் நிலையில், சவுதி அரேபிய அரசு, அந்நாட்டுக்கு நிதியுதவி தர முன் வந்துள்ளது. கடந்த 2019ம் ஆண்டு ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை, இரு யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்ததை சர்வதேச அளவில் பிரச்னையாக மாற்ற பாகிஸ்தான் முயன்ற போது, இது உள்நாட்டு விவகாரம் என பல நாடுகளும் ஒதுங்கிக் கொண்டன.

அந்த வகையில் சவுதி அரேபியாவும், ஐக்கிய அரபு நாடுகளும் இஸ்லாமிய தேசங்கள் என்ற வகையிலும், கலாச்சார, நட்பு ரீதியில் நெருக்கமான நாடுகள் என்ற அடிப்படையில் தங்கள் நாட்டுக்கு ஆதரவாக இருப்பார்கள் என கருதிய நிலையில், பொதுவான நிலைப்பாட்டை இரு நாடுகளும் எடுத்தன. இதன் காரணமாக பாகிஸ்தானுக்கும், சவுதி அரேபியாவுக்கும் இடையேயான நட்பில் விரிசல் விழுந்தது. இதனையடுத்து சவுதி அளித்த 3 பில்லியன் டாலர் கடனில் உடனடியாக 2 பில்லியன் டாலர்களை பாகிஸ்தான் அரசு திரும்ப செலுத்த நேரிட்டது. இப்படி இரு தரப்பு உறவுகளும் கசந்து இருந்த நிலையில், இரு நாடுகளுக்கு இடையேயான நட்பு மீண்டும் மலர்ந்துள்ளது.

Also read: மீட்கப்படுகிறதா பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர்? இனிப்பான செய்தி சொன்ன விமானப்படை அதிகாரி!

4.2 பில்லியன் கடனுதவி:

இதனிடையே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மூன்று நாள் பயணமாக சவுதி அரேபியாவுக்கு சென்றுள்ளார். ரியாத்தில் சவுதி இளவரசர் முகமது பின் சல்மானை நேரில் சந்தித்து இம்ரான் கான் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த பேச்சுவார்த்தையின் எதிரொலியாக தற்போது பாகிஸ்தானுக்கு 4.2 பில்லியன் டாலர்கள் கடனாக தருவதற்கு சவுதி அரேபியா முடிவெடுத்துள்ளது.

பாகிஸ்தானின் தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சரான ஃபவத் சவுத்ரி, இதனை ட்விட்டரில் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவில், “சவுதி அரேபிய அரசு, பாகிஸ்தானுக்கு 3 பில்லியன் டாலர்கள் நிதியுதவி வழங்க இருக்கிறது. பாகிஸ்தானின் மத்திய வங்கியில் 3 பில்லியன் டாலர்களை சவுதி உடனடியாக செலுத்த இருக்கிறது. இது தவிர இந்த ஆண்டு 1.2 பில்லியன் டாலர்கள் மதிப்புக்கு சுத்தீகரிக்கப்பட்ட பெட்ரோலியம் பொருட்களுக்கு நிதி வழங்க இருக்கிறது சவுதி அரேபியா.” இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Also read:   மனைவி கொடுமை தாங்கல.. ப்ளீஸ் என்னய ஜெயிலுக்கு அனுப்பிருங்க – போலீசுக்கு கணவர் நூதன கோரிக்கை

சவுதி அரேபிய அரசின் உதவிக்கு பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் நன்றி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், பாகிஸ்தானின் மத்திய வங்கிக்கு 3 பில்லியன் டார்களையும், பெட்ரோலிய பொருட்கள் மூலம் 1.2 பில்லியன் டாலர்களையும் தந்து இந்த நெருக்கடியான நேரத்தில் பாகிஸ்தானுக்கு உதவும் சவுதி அரேபிய இளவரசர் முகமது பின் சல்மானுக்கு நன்றி தெரிவிக்கிறேன். தவிப்பான காலகட்டங்களில் பாகிஸ்தானுக்கு, சவுதி அரேபியா கைகொடுத்து வந்திருக்கிறது. அந்த வகையில் தர்போது உலக நாடுகள் விலைவாசி உயர்வால் தவித்து வரும் நேரத்தில் பாகிஸ்தானுக்கு சவுதி உதவுகிறது.” என தெரிவித்துள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு 3 பில்லியன் பணமாகவும், 3 பில்லியன் டாலர்கள் பெட்ரோலிய பொருட்கள் வாங்கவும் சவுதி அரேபியா, பாகிஸ்தானுக்கு உதவியது. இருப்பினும் பின்னர் இருதரப்பு உறவிலும் விரிசல் ஏற்பட்டதையடுத்து 2 பில்லியனை பாகிஸ்தான் திருப்பித் தர நேரிட்டது. இதனிடையே 4.2 பில்லியன் டாலர்கள் மட்டுமல்லாது பாகிஸ்தானுக்கு 1.5 பில்லியன் அளவுக்கு கச்சா பொருட்கள் வாங்கவும் சவுதி உதவ இருப்பதாக அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Published by:Arun
First published:

Tags: PM Imran Khan, Saudi Arabia

அடுத்த செய்தி