ஈரானிலிருந்து தாக்குதல் நடைபெற்றிருந்தால் போரின் ஒரு பகுதியாகத் தான் பார்க்க முடியும்! சவுதி அரேபியா

ஈரானிலிருந்து தாக்குதல் நடைபெற்றிருந்தால் போரின் ஒரு பகுதியாகத் தான் பார்க்க முடியும்! சவுதி அரேபியா
தீப்பற்றி எரியும் எண்ணெய் வயல்கள்
  • News18
  • Last Updated: September 22, 2019, 6:01 PM IST
  • Share this:
ஈரானிலிருந்து தாக்குதல் நடைபெற்றிருந்தால் அதனை போர் நடவடிக்கையின் ஒரு பகுதியாகத்தான் கருத முடியும் என்று சவுதி அரேபியா தெரிவித்துள்ளது.

கச்சா எண்ணெய் உற்பத்தியில் முக்கிய இடத்தில் உள்ள சவுதி அரேபியாவின், அராம்கோ எண்ணெய் நிறுவனம் உலகின் மிக அதிக வருவாய் ஈட்டும் நிறுவனமும் ஆகும். அந்த நிறுவனத்தின் மிகப்பெரிய எண்ணெய் வயலில் மீது, கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஆளில்லா ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த விவகாரம் உலக அளவில் மிகப்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்தத் தாக்குதலுக்கு யேமன் நாட்டில் செயல்படும் ஹவுதி குழு பொறுப்பேற்றது. இருப்பினும், அதனை அமெரிக்க அரசும், சவுதி அரேபியாவும் புறக்கணித்தது. ஆனால், அமெரிக்கா இந்த தாக்குதல் ஈரானிலிருந்து நடைபெற்றுள்ளது என்று குற்றம்சாட்டியது.


இந்த விவகாரம் குறித்து பேசிய சவுதி அரேபிய வெளியுறவுத்துறை அமைச்சர் அடெல் அல் ஜூபெய்ர், ‘ஈரான் இந்த விவகாரத்துக்கு பொறுப்பேற்க வேண்டும். ஏனென்றால், ஏவுகனையும் ஆளில்லா விமானமும் ஈரான் பகுதியிலிருந்துதான் சவுதி அரேபியா மீது தாக்குதல் நடத்தியுள்ளது. ஈரான் நாட்டிலிருந்து தாக்குதல் நடைபெற்றிருந்தால், அதனை போரின் ஒரு பகுதியாகத் தான் கருத முடியும். அவர்கள் அதே பாதையைப் பின்பற்றினால், அவர்கள் ராணுவ நடவடிக்கையை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்’ என்று தெரிவித்தார்.

Also see:

First published: September 22, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்