மெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா

ஹவுத்திப் புரட்சியாளர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு சவுதி அரேபியாவின் டைப், ஜெட்டா நகர் மீதும், ஏவுகணை தாக்குதல் நடத்தினர்.

Vijay R | news18
Updated: May 20, 2019, 6:15 PM IST
மெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகள்... உச்சக்கட்ட பாதுகாப்பில் சவுதி அரேபியா
கோப்பு படம்
Vijay R | news18
Updated: May 20, 2019, 6:15 PM IST
மெக்காவை நோக்கி வந்த 2 ஏவுகணைகளை சவுதி அரேபிய ராணுவத்தின் எதிர்ப்பு ஏவுகணை தடுத்து நிறுத்தி தகர்த்துள்ளது. 

ஏமனிலுள்ள ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் அந்நாட்டு அரசுக்கும் இடையே கடுமையான உள்நாட்டுப் போர் நடைபெற்றுவருகிறது. கடந்த 2015-ம் ஆண்டு முதல் ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கு எதிராகப் போர் நடைபெற்று வருகிறது.

சில சமயங்களில் ஹவுத்திப் புரட்சியாளர்களுக்கும் சவுதி ராணுவத்துக்கும் கடும் துப்பாக்கிச் சண்டை நடக்கும். கடந்த சில நாட்களுக்கு முன் சவுதி அரேபிய அரசிற்கு சொந்தமான எண்ணெய் நிறுவனத்தின் பைப் லைன்களை புரட்சியாளர்கள் தகர்த்து எறிந்தனர். இதனால் சவுதி அரேபிய அரசிற்கு பல கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டது.


இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏமன் தலைநகர் மீது சவுதி அரேபிய விமானப்படை தாக்குதல் நடத்தியது. இந்த நகரம் புரட்சியாளர்கள் வசம் உள்ளது.

இதற்கு பழிவாங்கும் வகையில் ஹவுத்திப் புரட்சியாளர்கள் இன்று அதிகாலை 4 மணிக்கு சவுதி அரேபியாவின் டைப், ஜெட்டா நகர் மீதும் ஏவுகணை தாக்குதல் நடத்தினர். இந்த ஏவுகணைகளை சவுதி அரேபியா ராணுவம் நடுவானிலே இடைமறித்து தகர்த்தது.

இந்த இரண்டு ஏவுகணைகளும் மெக்கா நகரை நோக்கியே ஏவப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது. இஸ்லாமியர்கள் புனித ரமலான் நோன்பு கடைப்பிடிக்கும் தருணத்தில் ஏவுகணைகள் பாய்ந்துள்ளது அங்கு பெரும் பதற்றத்தை அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து சவுதி அரேபியா முழுவதும் உச்சக்கட்ட பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

Loading...

மேலும் இந்த ஏவுகணைகளை ஈரான் ராணுவம் தான் புரட்சியாளர்களுக்கு அளித்ததாக சவுதி அரேபிய அரசு குற்றம்சாட்டி உள்ளது.

Also Watch

First published: May 20, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...