Home /News /international /

நாத்திக கருத்தை பரப்பியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

நாத்திக கருத்தை பரப்பியவருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பு

மாதிரிப் படம்

மாதிரிப் படம்

வழக்கை விசாரித்த சவுதி நீதிமன்றம், அலி அபு லுகும் ட்விட்கள் சமய எதிர்ப்பு, சமய நம்பிக்கையின்மை மற்றும் நாத்திகத்தை ஊக்குவித்து இருப்பது தெரியவருவதாக கூறி அவரை குற்றவாளியாக அறிவித்தது.

    நாத்திக கருத்தை பரப்பியதாக ஏமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளருக்கு சவுதிஅரேபியா அரசு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. இதனை திரும்ப பெற பல்வேறு தரப்பினரும் வலியுறுத்தி வருகின்றனர்.

    மத்திய கிழக்கு நாடான சவுதி அரேபியா தீவிர மத கோட்பாடுகள் நிறைந்த நாடாகும். இங்கு மதத்தை நிந்திப்பது என்பது தீவிர குற்றமாக பார்க்கப்படுகிறது. இக்குற்றத்திற்கு கடுமையான தண்டமைகளும் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், ஏமன் நாட்டைச் சேர்ந்த பத்திரிக்கையாளரான  அலி அபு லுகும் தனது ட்விட்டர் பக்கம் மூலம் மத எதிர்ப்பு கருத்துகளை பதிவிட்டதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பான வழக்கை விசாரித்த சவுதி நீதிமன்றம், அவரது ட்விட்கள் சமய எதிர்ப்பு, சமய நம்பிக்கையின்மை மற்றும் நாத்திகத்தை ஊக்குவித்து இருப்பது தெரியவருவதாக கூறி அவரை குற்றவாளியாக அறிவித்தது. மேலும்,  அலி அபு லுகும்க்கு  15 ஆண்டுகளை சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது.

    இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள Reporters Without Borders (RSF) அமைப்பு  அலி அபுலோஹூமை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ’இணையம் மற்றும் சமூக ஊடகங்களை பத்திரிகையாளர்கள் மற்றும் வலைப்பதிவாளர்கள் விவாதத்திற்கும் தகவல் பரிமாற்றத்திற்கும் இடமாக பயன்படுத்துவது சவுதி அரேபியாவில் இன்னும் கடுமையான கண்காணிப்புக்கு உட்பட்டது என்பதை அவரது கைது மற்றும் தண்டனை காட்டுகிறது’ என்றும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. 

    இதையும் படிங்க: ஒமைக்ரான் தொற்றின் புதிய அறிகுறிகள் - ஆய்வில் வெளிவந்த உண்மைகள்

    Published by:Murugesh M
    First published:

    Tags: Court, Saudi Arabia

    அடுத்த செய்தி