முகப்பு /செய்தி /உலகம் / 'எல்லாருக்குமே விடுமுறை'.. கால்பந்து போட்டியில் வரலாற்று வெற்றி.. குஷியில் லீவ் அறிவித்த சவுதி மன்னர்

'எல்லாருக்குமே விடுமுறை'.. கால்பந்து போட்டியில் வரலாற்று வெற்றி.. குஷியில் லீவ் அறிவித்த சவுதி மன்னர்

சவுதி அரேபிய கால்பந்து அணி

சவுதி அரேபிய கால்பந்து அணி

அர்ஜெண்டினா அணியை 2-1 வீழ்த்தி வரலாறு காணாத வெற்றி பெற்ற சவுதி அரேபியாவில் கொண்டாட்டங்களுக்காக பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

  • Last Updated :
  • inter, IndiaRiyadhRiyadh

2022ஆம் ஆண்டு உலகக் கோப்பை கால்பந்து போட்டி நவம்பர் 20ஆம் தேதி தொடங்கியது. பிபாவின் ஐந்து கூட்டமைப்புகளைச் சேர்ந்த 32 அணிகள் களமிறங்கியுள்ள இந்த போட்டித் தொடரின் குரூப் பிரிவு போட்டிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. குரூப் சி பிரிவில் நேற்று நடைபெற்ற போட்டியில் தரவரிசையில் 51ஆவது இடத்தில் உள்ள கத்துக்குட்டி அணியான சவுதி அரேபியா உலக தரவரிசையில் 3ஆவது இடத்தில் இருக்கும் அர்ஜெண்டினா அணியுடன் மோதியது.

மேலும், அர்ஜெண்டினா அணியை கால்பந்து ஆட்டத்தின் ஜாம்பவானாகக் கருதப்படும் லியோனல் மெஸ்சி கேப்டனாக வழிநடத்துகிறார். இந்த போட்டியில் 9வது நிமிடத்தில் கிடைத்த பெனால்டி வாய்ப்பை பயன்படுத்தி முதல் கோலை அடித்து நடப்பு உலக கோப்பையில் தனது கோல் கணக்கை தொடங்கினார் லியோனல் மெஸ்ஸி. ஆனால், அதற்கு அடுத்த பின் அர்ஜெண்டினா கோல் ஏதும் அடிக்கவில்லை. அதேவேளை, 2ம் பாதி தொடங்கியதுமே ஆட்டத்தின் 48வது நிமிடத்தில் சவுதி வீரர் அல்ஷெரி கோல் அடிக்க, மற்றொரு சவுதி வீரர் அல்டவ்சராய் 54வது நிமிடத்தில் அடுத்த கோலை அடித்தார்.

இதன்மூலம், அர்ஜெண்டினாவை சவுதி 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அதிர்ச்சி வைத்தியம் தந்தது. மெஸ்ஸி தலைமையிலான அர்ஜெண்டினா அணி கோப்பை வெல்லும் என்ற எதிர்பார்த்து இருந்த நிலையில் சவுதி அரேபியாவிடம் தோல்வியடைந்தது ரசிகர்களிடையே மிகுந்த அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க: பேட்டியில் ஷாக் தகவல்கள்.. யுனைடெட் அணியில் இருந்து விலகிய ரொனால்டோ.. ரசிகர்கள் அதிர்ச்சி!

top videos

    அதேவேளை, வரலாற்று வெற்றியை பதிவு செய்த சவுதி அரேபியாவில் கொண்டாட்டம் களைக்கட்டியுள்ளது. இதை சிறப்பிக்கும் விதமாக சவுதி அரசு இன்று அந்நாட்டில் பொது விடுமுறை அறிவித்துள்ளது. அந்நாட்டின் கல்வி நிறுவனங்கள், பொது மற்றும் தனியார் அலுவலகங்கள் அனைத்திற்கும் விடுமுறை அறிவித்து சவுதி மன்னர் முகமது பின் சல்மான் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், அந்நாட்டின் தீம் பார்க்குகள், கேளிக்கை பூங்காக்கள் போன்ற பொழுதுபோக்கு இடங்களில் நுழைவு கட்டணங்கள் தள்ளுபடி செய்யப்படும் எனவும் அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.இந்த வெற்றி சவுதி அரேபியாவில் மட்டுமல்லாது ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளிலும் உற்சாகமாக கொண்டாடப்படுகிறது.

    First published:

    Tags: Argentina, FIFA, FIFA 2022, FIFA World Cup 2022, Saudi Arabia