சவுதி அரேபியாவில் நேற்று ஒரே நாளில் 81 நபர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தீவிரவாதம், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச்செயல்களில் ஈடுபட்டதற்காக இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளது.
இஸ்லாமிய நாடான சவுதி அரேபியாவில் குற்றச்செயல்களுக்கு கடுமையான தண்டனைகள் வழங்கப்பட்டு வருகின்றது. அதன்படி, கொலை, தீவிரவாத செயல், பாலியல் பலாத்காரம் போன்ற குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக நேற்று ஒரே நாளில் 81 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அறிவித்துள்ளார்.
இதில் வெளிநாட்டை சேர்ந்தவர்களும் அடங்குவர். ஏமனைச் சேர்ந்த 7 பேர், சிரியாவைச் சேர்ந்த ஒருவருக்கும் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. தண்டனை பெற்றவர்களில் சிலர் ஐ.எஸ்.ஐ.எஸ்., அல் கொய்தா போன்ற தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் ஆவர். நாட்டை சீர்குலைக்கும் நோக்கத்திற்காக ராஜ்யத்திற்குள் ஆயுதங்களை கடத்துவது மற்றும் கலவரம் மற்றும் குழப்பத்தை தூண்டுவது மற்றும் "பயங்கரவாத" ISIS, அல்-கொய்தா மற்றும் ஈரான் ஆதரவு ஹூதி குழுக்கள் மற்றும் பிற பயங்கரவாத அமைப்புகளின் திட்டங்களை செயல்படுத்துவது ஆகிய குற்றச்சாட்டுகளுக்காகவும் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ரஷ்ய அதிபர் புடின் உடன் பேச்சுவார்த்தைக்கு சம்மதம்: ஆனால் இங்கு தான் சந்திப்பு... இடத்தை அறிவித்த உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி
சர்வதேச அளவில் மரண தண்டனை விதிக்கும் நாடுகளில் சவுதி அரேபியா முன்னணியில் உள்ளது. பொதுவாக அங்கு தலையை துண்டித்து மரண தண்டனை நிறைவேற்றப்படுகிறது. கடந்த 2021ம் ஆண்டு 69 பேருக்கு சவுதியில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. தற்போது அதனை விடவும் அதிக எண்ணிக்கையில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Saudi Arabia