முகப்பு /செய்தி /உலகம் / இந்தியா செல்ல மக்களுக்கு தடை விதித்த சவுதி அரேபிய அரசு

இந்தியா செல்ல மக்களுக்கு தடை விதித்த சவுதி அரேபிய அரசு

இந்தியா செல்ல சௌதி அரேபிய அரசு பயணத் தடை

இந்தியா செல்ல சௌதி அரேபிய அரசு பயணத் தடை

கோவிட் பரவலை காரணம் காட்டி சவுதி அரேபிய அரசு 16 நாடுகளுக்கு பயணத் தடையை விதித்துள்ளது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

கோவிட்-19 பெருந்தொற்று பரவலை காரணம் காட்டி இந்தியா உள்ளிட்ட 15 நாடுகளுக்கு பயணம் செல்ல சவுதி அரேபிய குடிமக்களுக்கு தடை விதித்து  அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவுடன் லேபனான், சிரியா, துருக்கி, ஈரான், ஆப்கானிஸ்தான், ஏமன், சோமாலியா, காங்கோ, எத்தியோப்பியா, லிபியா, இந்தோனேசியா, வியட்நாம், அர்மேனியா, பெலாரஸ் மற்றும் வெனிசுவேலா  என மொத்தம் 16 நாடுகளுக்கு சவுதி அரேபியா அரசு தடை விதித்துள்ளது.

கோவிட் பரவல் அச்சத்தை காரணம் காட்டியே இந்த பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளது. சவுதி அரேபியாவில் 467 புதிய கோவிட் பாதிப்புகள் பதிவாகியுள்ளது. இதன் மூலம் மொத்த பாதிப்பு எண்ணிக்கை 7 லட்சத்து 63 ஆயிரத்து 042ஆக அதிகரித்துள்ளது. அத்துடன் நாடு முழுவதும் 9,100 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. 6,400 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வருகின்றனர்.

அந்நாட்டின் 70 சதவீத மக்கள் இரண்டு டோஸ் கோவிட் தடுப்பூசி செலுத்தியுள்ளனர். இருப்பினும் சீனா மற்றும் வட கொரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள திடீர் கோவிட் பரவலும், மங்கிபாக்ஸ் எனப்படும் குரங்கு அம்மை நோய் பரவலும் சவுதி அரேபியாவை கலக்கமடைய செய்துள்ளது. இதன் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: நடு வானில் பிறந்த குழந்தைக்கு விசித்திரமான பெயர் சூட்டிய பெற்றோர்

அத்துடன் சவுதிஅரேபியாவில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்பவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தி மூன்று மாதமாவது முடிந்திருக்க வேண்டும் எனவும் 16 வயதுக்கும் குறைவானவர்கள் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருந்தால் போதும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஏதேனும் மருத்துவ காரணங்களுக்காக தடுப்பூசி செலுத்த முடியாது என்றால் அதற்குரிய ஆவணங்களை சமர்பிக்கவும் சௌதி அரசு உத்தரவிட்டுள்ளது.

First published:

Tags: Corona, India, Saudi Arabia