Home /News /international /

சவுதி அரேபியாவில் 30 ரயில் ஓட்டுனர் பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்!

சவுதி அரேபியாவில் 30 ரயில் ஓட்டுனர் பணியிடங்களுக்கு 28,000 பெண்கள் விண்ணப்பம்!

திருமணம், குடும்பம், விவாகரத்து மற்றும் குழந்தைகள் தொடர்பான முடிவுகளில் பெண்களும் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திருமணம், குடும்பம், விவாகரத்து மற்றும் குழந்தைகள் தொடர்பான முடிவுகளில் பெண்களும் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

திருமணம், குடும்பம், விவாகரத்து மற்றும் குழந்தைகள் தொடர்பான முடிவுகளில் பெண்களும் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    சவுதி அரேபியாவில் ரயில் நிறுவனம் ஒன்று, 30 பெண் ரயில் ஓட்டுனர்களுக்கான காலி பணியிடங்களை அறிவித்த நிலையில், அந்த பணிக்கு 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

    சவுதி போன்ற பழமைவாதம் நிறைந்த இஸ்லாமிய நாட்டில், இதுபோன்ற பணிகளுக்கு பெண்களில் பெண்களை பணியமர்த்த காலி பணியிடங்கள் அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும்.

    பல தசாப்தங்களாக, சவுதி அரேபியா உலகின் மிகக் குறைந்த பெண் ஊழியர்களை கொண்டுள்ள நாடாக விளங்கி வருகிறது. எனினும், சமீப காலமாக இளவரசர் முகமது பின் சல்மானின் எண்ணெய் சார்ந்த பொருளாதாரத்தை பன்முகப்படுத்துவதற்கான திட்டத்தின் ஒரு பகுதியாக நாட்டில் வேலை செய்யும் பெண்களின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

    இதையும் படிங்க - போர் பதற்றத்தில் நாடுகள்: ரஷ்யா, உக்ரைன் நாடுகளின் ராணுவ பலம் என்ன?

    இதன் காரணமாக, பெண்கள் வாகனம் ஓட்டுவதற்கான தடையை முடிவுக்குக் கொண்டுவந்தது மற்றும் பெண்கள் சுதந்திரமாக பயணிக்க அனுமதிக்கும் ஆண் பாதுகாவலர் சட்டங்களை தளர்த்துவது உட்பட பல சமூக சீர்திருத்தங்களை அரசு முன்னெடுத்துள்ளது.

    இத்தகைய மாற்றங்களின் விளைவாக, வேலைக்கு செல்லும் பெண்களின் பங்களிப்பு கடந்த ஐந்து ஆண்டுகளில் கிட்டத்தட்ட இரு மடங்காக அதிகரித்து 33 சதவீதமாக ஆக உள்ளது, மேலும் கடந்த ஆண்டின் முதல் பாதியில் ஆண்களை விட அதிகமான பெண்களே பணிக்கு வந்துள்ளதாகவும் தகவல் தெரிவிக்கின்றன.

    எனினும், ஆண்களின் வசம் இன்னும் பெரும்பாலான வேலை வாய்ப்புகள் உள்ளன. குறிப்பாக பொதுத்துறையில், கடந்த ஆண்டு அமெரிக்காவை தளமாகக் கொண்ட ப்ரூக்கிங்ஸ் இன்ஸ்டிடியூட் என்ற திங்க் டேங்க் வெளியிட்ட ஒரு ஆய்வின்படி, ஸ்பெயினின் ரயில் நிறுவனமான Renfe இன் வேலைவாய்ப்பு பிரிவு, பொதுத் துறையில் பணிபுரிய விரும்பும் பெண்களில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே திருப்திப்படுத்த வாய்ப்புள்ளது.

    இதையும் படிங்க - விளையாட்டு நிகழ்வுகளில் ஹிஜாப்களை தடை செய்யும் மசோதா - பிரான்ஸின் தேசிய சபைக்கு மாற்றம்!

    பெரிய சமூக சீர்திருத்தங்களை ஏற்படுத்திய போதிலும், சவூதி பெண்கள் திருமணம் செய்துகொள்ள, சிறையை விட்டு வெளியேற அல்லது சில உடல்நலப் பாதுகாப்புகளைப் பெற ஆண் பாதுகாவலரின் ஒப்புதலைப் பெற வேண்டியது உள்ளது என்று தெரிவித்துள்ளது.

    மேலும், அந்நாட்டில் திருமணம், குடும்பம், விவாகரத்து மற்றும் குழந்தைகள் தொடர்பான முடிவுகளை எடுப்பதில் பெண்களும் தொடர்ந்து பாகுபாடுகளை எதிர்கொள்வதாக மனித உரிமை ஆர்வலர்கள் கூறுகின்றனர்.

    எனினும், 30 காலிப் பணியிடங்களை கொண்ட ஒரு பணிக்கு 28,000 பெண்கள் விண்ணப்பித்துள்ளது அந்நாட்டில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Published by:Esakki Raja
    First published:

    Tags: Saudi Arabia

    அடுத்த செய்தி